பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான் எஞ்சியது. அதுவே அவனது பலத்தைப் போக்கடித்து விட்டது. வெறும் புத்தகப் பூச்சியாக மட்டுமே இயங்க முடிந்த தணிகாசலத்தை எழுத்தாளனக்கியிருக்கிறாள் ஆடலழகி செங்கமலம். அவள் அவனுக்கு ஏமாற்றத்தை மட்டுமன்று, ஒரு கதையையும் அளித்திருக்கிறாள். இம்முடிவு நம்முடைய நடைமுறை வாழ்வுக்கு ஒட்டி வருமானல், நூறாயிரம் தணிகாசலங்களை எழுத்தாளர்களாகக் கண்டிருக்குமே இந்தத் தமிழ் கூறும் கல்லுலகம்? புதுப்பட்டிச் சலனம் சின்னத் தனமான அற்ப நிலை கொண்ட காதல் லீலைகள் (silly romances) அல்லவா? நல்ல வேளை, அந்நாளில் ‘மஞ்சள் பத்திரிகை’ ஏதும் பிறக்கவில்லை.

தன் தலையெழுத்தை நிர்ணயிக்கத் தெரிந்து கொண்டிராத ‘இரண்டாவது பிரம்மா’ இவன். ஒருமுறை சொல்லும் செயலும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்கிறான். ஆனால், அவனிடமோ ‘வேறு மனிதர்களை’யே சந்திக்க நேர்கிறது. ‘தோல்வியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!’ என்றான். ஆனால் அவனை கொண்ட காதலில், பிழைத்த பிழைப்பில் தோல்வி யடைந்தான். ‘தலைவிதியாவது, மண்ணுங்கட்டியாவது’ என்று பிதற்றுகிறான். கடைசியில் அவன் நம்பிய அதே தலைவிதியினால் அவனுடைய உமா மண்ணுங்கட்டியாகவே ஆகிவிட்டாள்!

உமாவுக்குத் தணிகாசலம் எழுத்தாளனாக் காட்சி கொடுத்தபடியினால்தான் அவன் அவளது தெய்வமாகக் கோயில் கொள்ள முடிந்தது. ஆனால் அதே எழுத்தாளனைச் செங்கமலத்தின் காலடியில் கிடக்கக்கண்டபோதும், கடைசியில், பம்பாயில் செங்கமலத்தின் இல்லத்தை அடைந்து, அவளை ஆடவைக்க வேண்டுமென்ற ‘வெறி

181