பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.அதற்கு ராகவன், “அவளைத் தனியாக அழைத்துக் கொண்டுவந்து என்ன செய்கிறது? அவளோடு எந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது? எங்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. அவளுடைய பேச்சு என் மனத்தில் ஏறவே ஏறாது. நான் பேசுகிற விஷயம் அவளுக்குப் புரியாது!” என்று பதிலிறுக்கிறான்.

“அது யாருடைய தப்பு? அவளை நீங்கள் படிப்பித்து உங்கள் நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களுடன் சமதையாகப் படிப்பில்லாதவளை மணம் செய்துகொண்டிருக்கக் கூடாது. அப்போது தவறுசெய்துவிட்டு இப்போது இப்படிப் பேசுவதில் என்ன பயன்?”-தாரிணி.

“தப்பு என் பேரில் இல்லை, தாரிணி! உங்கள் பேரில்தான்! உங்களால் வந்த வினைதான் இதெல்லாம்!” -ராகவன்.

“வெகு அழகு! இப்படியெல்லாம் பேசாதீர்கள். உங்கள் மனைவி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நாமும் போகலாம், வாருங்கள்! இல்லாவிட்டால், அவளுடைய ‘கோளாறு’ இன்னும் அதிகமாகிவிடும்!”-தாரிணி.

“அதிகமானால் ஆகட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை!” -ராகவன்.

ராகவன் சாமான்யமான ஆளா, என்ன? பாரதியின் பெண்மை வாழ்த்து அவனுக்குப் பிடிக்காவிட்டாலும், “தங்குவதற்குத் தாஜ்மஹால்; ஒருகூஜா திராட்சை ரசம்; ஒரு கவிதைப் புத்தகம்; என்னருகில் நீ இதைக் காட்டிலும் வேறு சொர்க்கம் உண்டோ?” என்று தாரிணியை உற்றுநோக்கி உமர்கயாமின், பாடலைக்கூற

31