பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேசியப் புரட்சிக் கனல் !

தாரிணியும் சூர்யாவும் அரசியல் புரட்சி இயக்கத்தைச் சார்ந்தவர்கள். விடுதலைப் போராட்டம்!

இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகப்பழக, ராகவன் விலங்காகிவிடுகிறான். சூர்யா மீது அவனுக்குக் கட்டுக் கடங்காப் பகை. இம்மாதிரியான சூழலின் சுழல் உருவாகும் நிலையில், நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ’ (Othello) நாடகத்தின் உச்சக்கட்ட உறுப்பினர்களான ஒதெல்லோ, டெஸ்டமொனா, இயாகோ ஆகிய கதை உறுப்பினர்களின் கதையையும் நினைவு கூர்கிறோமே!...சூர்யா அடிக்கடி தன் வீட்டுக்கு வருவதையும் தன் மனைவியுடன் அவன் பழகுவதையும் கண்டு அநாகரிகமான முறையில் ஐயம் கொள்கிறான். சூர்யாவைப் போலிஸில் காட்டிக்கொடுக்க முனைகிறான், தனக்குத் தாரிணி கிடைக்கவேண்டுமென்று பகற்கனவு கண்டவனுக்கு, தாரிணி தன்னை மறந்துவிடும்படி எச்சரிக்கை விடுத்ததே பெரிய தோல்வியல்லவா? திரைப்படமாக இருந்திருந்தால் இங்நேரம் ராகவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்! ஆனால், இப்பொழுது அவன் சீதாவைப் பைத்தியமாக ஆக்கிக் கொண்டிருந்தான். ஓயாமல் ‘தொலைந்துபோ! தொலைந்துபோ!’ என்று தன்னைக் கொண்டவனே சொல்லக்கேட்ட சீதா உண்மையாகவே தொலைந்துபோய் விட முடிவுசெய்து, கைத்துப்பாக்கியோடு தயாராக இருக்கையில், சூர்யா அவள் உயிரைக் காப்பாற்றி விடுகிறான். சீதாவின் அம்மாவிடம் அவன் அன்றொருநாள் கொடுத்த வாக்கின் மெய்ம்மைப்பாட்டை மறுமுறையும்

மெய்ப்பித்தான். ஒரு காலத்தில் சீதாவை உள்ளத்தால் விரும்பி,உள்ளத்தில் இருத்திக் கனவுகண்ட ‘கதை’ அவன்

33