பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரை ‘விழுப்புண்’ போலத்தான்! ‘தேசத்தை நாம் காப்பாற்ற முயலுவதைவிட நமக்குத் தெரிந்த ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு,’ என்னும்படியான தாரிணியின் ‘ஹிதோபதேசத்’துக்கும் மதிப்பு வாய்க்கிறது.

உணர்ச்சிபூர்வமான மற்றொரு கட்டம்.

கணவனின் தொல்லை தாளாமல் நரகவேதனைப்பட்ட சீதா தன்னை எங்காவது அழைத்துக்கொண்டு செல்லும்படி, காலில் விழாத குறையாக குர்யாவிடம் மன்றாடுகிறாள். சூர்யா அவளுக்குப் புத்தி புகட்டுகிறான்.

வாசல் வரையில் சூரியாவைக் கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்புகிறாள் சீதா. ராகவன் வந்து நிற்கிறான். “அவனிடம் என்னடி ரகசியம் பேசினாய்?” என்று கேட்டு ஒரு கன்னத்தில் அறைகிறான். அதிலும் திருப்திப்படாமல், மறுகன்னத்திலும் அறைகிறான். ‘உங்களுடைய நடத்தையைப்பற்றிச் சந்தேகம்!’ என்று நாக்கில் நரம்பின்றி, பல்மேல் பல்போட்டு, உள்ளங் கூசாமல் ஏசுகிறான்.

“நான் உங்கள் பேரிலும் சந்தேகப்படுகிறேன்!” என்கிறாள் சீதா.

இந்த ஓர் எச்சரிக்கையில், சீதாவின் கெட்டதைப் பொசுக்கவல்ல நெருப்புச் சக்தி பளிச்சிடுகிறது!

‘கடவுளின் ராஜ்யம் உனக்குள்ளே!’

கடவுளின் ராஜ்யம் உனக்குள்ளே!
அற்புதமான வேதாந்தத் தத்துவம்.

34