பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜனவரி 31

னவரி 31.

“ஹரீ! தும் ஹரோ - ஜனகீ மீரு!”

‘பகவானே! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!” என்று ஒலித்த சோக கீதத்துக்கும், ‘அஹிம்சையே எல்லாவகை ஆயுதங்களுள்ளும் மிகமிக வலிமை வாய்ந்ததென்று மண்ணில் மெய்ப்பித்துக்காட்டி விண்ஏகிச் சென்ற அண்ணலின் மரண நிழலுக்கும் ஊடே ஊடாடியபடி சீதா எப்படியோ தன் மனையை மிதிக்கிறாள். கணவனின் அன்புக்கு மிஞ்சிய பேறு ஏது?’

ராகவன் தாரிணியிடம் ‘காதல்பிச்சை’ கேட்கும் அவ வேளை அது.

தாரிணி தலையோடு கால்வரை முஸ்லீம் பந்தா போட்டிருக்கிறாள்.

சீதாவுக்கு தன்னம்பிக்கையும் மனவலிமையும் பறிபோய் எத்தனையோ காலம் ஆகிவிட்டது. ஒரு சமயம் அவள் தாரிணியிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறாள். தனக்குப்பின் தாரிணி தன் கணவனை மணந்துகொள்ள வேண்டுமென்பதே அவ்வேண்டுகோள். அதற்கு அது சமயம் அவளும் உடன்படுகிறாள்.

இப்பொழுது அந்தக் கட்டம் புத்துயிர் பெறுகிறது. "என் தங்கை சீதாவின் ஆவியாவது நிம்மதிபெற வேண்டும். நான் அவளுக்குக் கொடுத்த வாக்கை மீறப்போவதில்லை. நீங்கள் என்னக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால், எனக்கும் சம்மதம், ஆனால் நீங்கள் தான்

36