பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யோசித்துச் சொல்ல வேண்டும்!” என்று ‘பொடி’ தூவிப் ‘பொடி’ வைக்கிறாள் தாரிணி.

சீதா வழி விலகுகிறாள்.

மறுநாள் தாரிணி - ராகவன் சந்திப்பு.

தாரிணி - அதாவது ரஜனிபூர் இளவரசி - சீதாவின் தமக்கை தன்னுடைய எழிலார்ந்த பர்தாவை நீக்குகிறாள்!

ஆ!

தாரிணியா அவள்?

காதல் என்பது பொய்க்கனவா? அற்பமான மாயை யேதானா?

தாரிணி கோர சொரூபம் கொண்டிலங்குகிறாள். முகத்தில் நீண்ட பிளவு. ஒரு கண், ஒரு கை இல்லை. தெய்வச்சிலையை எந்த வெறியனே உடைத்துவிட்டான்!

“தாரிணி! தாரிணி!” என்று தாரிணி நாமாவளி பாடிக்கொண்டிருந்த ராகவன் மனம் இப்போது பின் வாங்குகிறது. ஆனால் இதே தாரிணியை முன்னர் இதய நிறைவுடன் காதலித்த சூர்யா, இப்போது அவளை எற்க முன்வருகிறான்.

சீதா மஞ்சள் குங்குமத்துடன், தன் கணவன் மடியில் சாய்ந்தபடி, மகளின் அருகில் இருந்தபடி, “ஒரு குறையும் இல்லாமல் மனநிம்மதியுடன் நான் போகிறேன். நான் பாக்கியசாலி அக்கா!” என்று சொல்லிக்கொண்டே நீள்துயில் வசப்படுகிறாள். அலைஓசையின் மரணபயம் இனி அவளுக்கு ஏது?

ஆஹா!...சீதா பாக்கியசாலி!

37