பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிலர் மிகமிக இன்னலுற்றும் வேறுசிலர் மிகமிக இன்பமுற்றும் சாகிறார்கள்.

வேறுசிலர் குற்றங்களைச் செய்தும்கூட யாதொரு தொல்லைகளும் காணாமல் இருக்கிறார்கள்.

இன்னும்பலர் யாதொரு தீம்பும் செய்யாதிருந்தும், தொல்லை அனுபவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உலகின் பாரபட்ச நிலைகளைக் காணுகையில் நாம், “தெய்வம் என்ற ஒன்று இருக்கிறதா?” என்று ஐயப்பட வேண்டியவர்களாகின்றோம்.

இதற்கு ‘கல்கி’ அவர்கள் விளக்கம் தருகிறார்:

அன்னை ஒருத்தி. அவளுக்கு நான்கு குழந்தைகள். மூன்று குழந்தைகள் செம்மையாக இருக்கின்றன. அவற்றுக்கு நல்லஉணவு. ஒன்றுமட்டும் நோய்க்குழந்தை. இதற்கு வெறும் கஞ்சிதான் கொடுக்கிறாள். இதைக் கண்டு, தன் தாயைப் பாராபட்சமுள்ளவள் எனக்கருதினால், இது நோய்வசப்பட்ட குழந்தையின் தவறுதானே? குழந்தை சிற்றறிவு படைத்தது. தன் நிமித்தம் தன் அன்னைக்கு உள்ள அக்கறையும் அன்பும் அதற்குப் பொருள்படவில்லை.

கடவுளைப்பற்றிக் குறைகூறுபவர்களும் மேற்படி குழந்தையின் நிலையையே அடைகிறார்கள்.

கடவுளைப்பற்றி அறியும் ஆற்றலோ பக்குவமோ நமக்கு இல்லாவிட்டாலும், அல்லது அத்தகைய பண்பாடு நம்மிடையே வளரவில்லையென்றாலும், கடவுளிடம்

39