பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிணக்கு ஏற்படுகிறது. நூல் வெளியிடும் உரிமை தரத் தயங்குகிறாள் பூரணி. கோபம் வருகிறது அரவிந்தனுக்கு. ‘நீங்கள் வெயிலின் வெம்மையால் கீழே விழுந்தால் அதற்காக ஊரெல்லாம் பிணை என்று எண்ணிச் சீற வேண்டியதில்லே’ என்று கூறிப் புறப்பட்டு விடுகிறான். அவன் போய்விட்ட இடத்தில், அரவிந்தன் மறந்து விட்டுச்சென்ற அவனுடைய குறிப்பேடு கிடக்கிறது. அக் குறிப்பேடு அவளைப் போலவே மற்றொருவன் இவ்வுலகில் இருக்கிறான் என்பதைக் காட்டிவிட்டது. இரு மனங்களும் ஒரு மனம் ஆவதற்கு இயற்கை பின்னணி ஒவியம் தீட்டுகிறது.

நாடும் ஏடும் போற்றும் பேச்சாளராகி விடுகிறாள் பூரணி. இலங்கை முதலான வெளிநாடுகளுக்கும் அழைப்பு வருகிறது பூரணிக்கு. அரவிந்தன் செயலில் ஈடுபடுகிறான்; சமூகச் சீர்திருத்தங்கள் செய்கிறான்.

“பூரணி! நீ மலைமேலே ஏறிக்கொண்டே போகிறாய்; நான் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறேன். ஆனாலும் உன்னை எட்டிப் பிடிக்காமல் பின்தங்கியே நிற்கிறேன்!” என்று சொல்லித் தன் குறைவு மனப்பான்மையைக் காட்டிக்கொள்ளுகிற அளவுக்கு இருக்கிறான் அரவிந்தன்.

திருமணம் உறுதிப்படுத்துகிறார்கள் - பூரணிக்கும் அரவிந்தனுக்கும். வெட்கத்தோடு உடன்படுகிறாள் பூரணி ஆனால், பாவம்,

45