பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரவிந்தன் தன் கொள்கைகளையும் தத்துவங்களையும் எண்ணித் தன்னை மென்மையாக்கிக் கொண்டு “திருமணத்துக்கு இப்போதென்ன அவசரம்?” என்கிறான். எல்லோரும் போய் விடுகிறார்கள்.

சாதனைகளில் இறங்குகிறான் அரவிந்தன். சூழ்நிலை. ஒப்பவில்லை. ஆயினும் தொடர்ந்து சேரித் தொண்டு, சீர்திருத்தம் என்று ஓயாது அலைந்துகொண்டிருக்கிறான்.

கடும் காய்ச்சல்;சாவின் வாசலிலே நிற்கிறான் அரவிந்தன். சொற்பொழிவிற்குச் சென்றிருந்த பூரணியோ மற்றவரோ அறிய முடியாத திருப்பத்தில் - சாவின் திருப்பத்தில் நுழையப் பார்க்கிறான்; நுழைந்துவிடுகிறான்.

பூரணி, திலகவதி...!


மூன்று பொருள்கள்

இலட்சியங்கள், இலட்சியங்கள் என்று வாய்ப்புக்கிட்டும் பொழுதெல்லாம் நாம் மறக்காமல்-மறைக்காமல் முழங்கி வருகிறோம் அல்லவா?-அந்த இலட்சியங்கள் என்றால் என்ன அர்த்தம்...? அவை எங்கிருந்தாவது இறக்குமதியான அயல்நாட்டுச் சரக்கா? ஞானத்தை எல்லைக்கோடாகக் கொண்டவர்களும் சரி, ஞானத்தின் எல்லையினை அடைந்தவர்களும் சரி, இவர்கள் அனைவரையும் புள்ளி போட்டுப் பார்த்தால், மனிதப்பிறவி கொண்டவர்கள் எல்லோருமே இலட்சியமுழக்கம் செய்கிறார்-

46