பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களே?-அப்படியென்றால், இப்படிப்பட்ட லட்சிய பஜனை செய்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா?-இல்லை, மனிதர்களுள் மனிதர்களா?

ஒர் உண்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இவ் வுலகின் கண் யாருடைய கண்ணேறுக்கும் கண் சாயாமல், மிகவும் எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருள்களிலே தலையிடம் பெறுபவை மூன்று: ஒன்று: கேள்வி; இரண்டு: குறை சொல்லல்; மூன்று: உபதேசம்.

கேள்வி என்றால், அதன் குறிக்கோள், விடையை எதிர்பார்க்கும். ஆனால் நம் அருந்தமிழ் நாட்டிலே கேள்வி என்றால், விடை என்ற ஒன்று இருப்பதாகவோ, அல்லது இருக்கவேண்டுமென்று கருதவோ, அல்லது கருதத் துணிவுகொள்ளவோ மறுக்கிறார்கள்; அன்றி, மறந்துவிடுகிறார்கள். இந்த மகானுபாவர்கள், தாம் வாணவெளிப் பயணம் அனுப்பிய கேள்விக் கணைகளின் விண் எட்டும் பெருமையில் மட்டுமே நின்று நிலவிப் புகழ் பூத்து, புன்னகை பூத்துத் திரிய விழைகிறார்கள். இவர்களுடைய இலட்சியம், தாம் அனுப்பும் வினாக்களுக்குத் தம்மிடமிருந்து விடையை எதிர்பார்ப்பதோ, விரும்புவதோ, விரும்பத்தக்கதல்ல என்பதாகும். இந்த அப்பாவி மனிதர்களின் மனப் பலவீனங்களின் குறை என்ன தெரியுமா?-இவர்கள் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு, தங்களைப் ‘பெரிய மனிதர்’களாக ‘வேஷம்’ போட்டுக் காண்பிக்கும் இலட்சியமற்ற, இலட்சியப் பிண்டங்கள்! இவர்கள் கோலம் இட்டுக்காட்டும் கேள்விகளின் சுற்றுவடிவத்தில் ஐயம் எங்கேனும்-எப்படியேனும் பிசிறுதட்டிக் காணப்பட்டால், விளைந்தது வினை!-பயப்பட்டு விடாதீர்கள்; காலவினை ஏதும் கிடையாது!-இந்த இலட்சிய தாசர்கள்

47