பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆகி நிற்பதுதான் வாழ்வு. இவ்விதமான வாழ்வின் முதல் ஆட்டத்திற்குக் கதாநாயகனாக அப்பாவி மனிதனும், இறுதிக் கூத்திற்குக் கதைத் தலைவனாக அலகிலா விளையாட்டுடையானும் வேடம் புனைந்துகொண்டு நாடகம் ஆடுகின்ற காலவரையறையின் இடைப்பகுதியில் பற்பல சோதனைகளும் விளையாடத் தொடங்குகின்றன. இச்சோதனைகளைச் சாதனைகளாக்க மனிதன் கனவு காண்கிறான். இந்தக் கனவுக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான், இலட்சியம். மற்ற மக்களின் கண்ணோட்டத்தில் தன்னை ‘சாதாரண மனிதன்’ என்ற கட்டத்தினின்றும் உயர்த்த வேண்டுமென்று கொள்கிறான் மனிதன். கொள்கை வெறியாகிறது; வெறி அவனுள் இலட்சியக் கோட்டையையே உருவாக்கி விடுகின்றது. ஆனால், இந்தக் கோட்டை, கொள்கை ததும்பும் அம்மனிதனைக் கட்டிக் காக்கிறதா? அதுதான் இல்லை!...

இந்த ‘இல்லை’ என்னும் விடையில்தான் வாழ்க்கையின் ‘ஆமாம்’ என்கிற முத்தாய்ப்பு இருக்கிறதோ?


இந்த இலட்சியங்கள்

ஒன்றைச் சொல்ல வேண்டும்.

வாழ்வு ஓர் இலட்சியம்; அதுவேதான் தத்துவமும் கூட. இவ்வகைப் பண்பு கொண்ட இலட்சியத் தத்துவத்தின் குறிக்கோள்கள், வளமார்ந்த இந்தத் தெய்வத் தமிழ்த் திருநாட்டிலே ‘விதை நெல்’ மணிகளாகப் போற்றப்பெற வேண்டுமென்றே அன்றைய பெரியார்கள் கனவு கண்டார்கள். அந்தக் கனவுகள் லட்சியசித்தி

50