பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலத்தை மாற்றுவதற்கோ, இயற்கையின் நியதி, இவர்களின் தாலாட்டுப் பொம்மையல்ல. இதே கணிப்புக் கண்ணோட்டத்தில் இலக்கியம் ஒயிலோடு நிழலாடுகையில், ஒன்றை நாம் முடிவுகட்டத் தவறலாகாது. காலத்தைக் கடந்து நிற்கும் வல்லமைபெற்ற இலக்கியச் சிருஷ்டிகளைப் படைத்தவர்கள்-படைப்பவர்கள் அனைவருக்கும் எப்போதுமே ஓர் ‘இலக்கிய அந்தஸ்து’வாய்க்கும். இந்த மதிப்பை க. நா. சு. போன்றவர்களின் திருக்கரங்களாலோ, அல்லது, திருவாய்மூலமாகவோதான் கொடுக்கவேண்டுமென்று யாரும் ‘விதி’ அமைத்துக் கொடுக்கவில்லை. நமக்கும் அப்படிப்பட்ட ‘தலைவிதி’ ஏதும் கிடையாது.

“1925 வாக்கிலே எழுதப்பட்டிருந்தால், தமிழிலே இதையும் நல்ல நாவலாகச் சொல்லியிருக்கலாம். 1961-ல் வெளி வருகிறதே-என்ன செய்வது?” என்று நகைச் சுவைக் கூத்தோடு இலக்கியத்தின் சார்பில் ‘வக்காலத்து’ வாங்கிக்கொண்டு அங்கலாய்க்கிறார் க. நா. சு. இவரது ‘மதிப்பிற்குரிய’ கருத்துப்பிரகாரம் பார்த்தால்கூட, 1925-ல் நல்ல காவலாகச் சொல்லப்படும் ஒரு நவீனம் 1961-ல் வெளிவருவதால் ‘சோடை’ போய்விடுமா? இல்லை, போய் விடலாமா? போய்விடமுடியுமா? 1925-க்கும் 1961-க்கும் இடைப்படுகின்ற இந்தக் கால நடுவெளியில் இவர் ‘சூட்சுமம்’ வைத்துப் பேசும் அளவுக்கு ‘இலக்கிய வியவகாரம்’ தமிழ் மண்ணில் அப்படி என்ன. அவசரரீதியில் நடந்து தொலைத்திருக்கிறது? தமிழ் இலக்கிய ரசிகப்பெருமக்களிடையே ஒரு நாவல். நன்மதிப்புப் பெறுமென்றால், அது 1925-ஆம் ஆண்டானல் என்ன? 1961 ஆனால் என்ன?

60