பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நம் க.நா.சு. இருக்கிறாரல்லவா, அவருக்கு இந்த வருஷ எண்களிலே எப்போதுமே ஒரு ‘கிறக்கம்’ உண்டு. 1945, 35 அப்படி, இப்படி என்று வருஷத்தை வரம்பறுத்து, கனகச்சிதமான எடை காட்டுமென்று விளம்பரப் படுத்திவரும் தம்முடைய இலக்கியத் தராசில் தமிழகத்தின் இலக்கியப் பிரம்மாக்களைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி இடைகட்டி, எடைபோட்டு, பிறகு சாங்கோ பாங்கமாகத் தம் ‘அருமை பெருமை’ மிகுந்த கருத்துரைகளை விளாசித்தள்ளுவார். இத்தகைய போக்கில்தான், முன்பொருமுறை ‘நாவல் தேக்க’த்தின் பிரதம எஞ்சினீயராகவும் இடைக்காலப் பதவியை ஏற்றார்.

இவருக்கென ஒரு ‘கூட்டம்’ (Gang) உண்டு; புகழுவார்; இவர்களை மட்டுமே, தாம் தயாரிக்கும் பட்டியில்—பட்டியலில் சேர்ப்பார். இவரது அபிமானத்தைப் பெறத் தவறினால், முடிந்தது ‘கதை’!...

தற்போதைய அமெரிக்க இலக்கியப் போக்கைப்பற்றி இ. பி. விப்பில் (E. P. Whipple) நிர்ணயம் செய்யும் பொழுது, “The science of criticism is thus in danger of becoming a kind of intellectual anatomy,” என்று தாய்ப்பிடுகிறார்.

அன்பர் க.நா.சு. வுக்கு இவ்வரிகள் ஏகப்பொருத்தம். அல்லவா?


பாவம், அரவிந்தன்!

திரு நா. பார்த்தசாரதி அவர்கள் தம்முடைய ‘குறிஞ்சிமலரி’ன் முன்னுரையில் இவ்வாறு எழுத முனைகிறார், “சைவசமயகுரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார்

61