பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆனால், இவர்களது முடிவு இவருடைய சிந்தனையை ஏன் கவர்ந்தது?

திலகவதியின் கலிப்பகையாருக்கு உண்டான முடிவு தான், பூரணியின் அரவிந்தனுக்கும் முடிவாக (Finishing) வேண்டுமா? .

யார் சொன்னர்கள்?

ஒன்றைமட்டும் சொல்லுவேன்: அரவிந்தன் இவ்வளவு இளம் பிராயத்தில்-லட்சிய சித்தியின் அரைவேக்காடான பக்குவ நிலையுடன் சாகடிக்கப்படாமலிருந்தால், ‘குறிஞ்சி மல’ரின் இலக்கியத் தரம் இன்னும் உயர்ந்திருக்க முடியும்!


வெறும் கனவுகள்

தமிழ் மாநில அரசாட்சியின் புள்ளிக் கணக்குப்படி பார்த்தால், சென்னைக்கு அடுத்தபடியாகப் பெருமை பெறும் நகரம் மதுரை என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட மதுரை நகரத்தின் நாற்சந்தி ஒன்றில் பெண். ஒருத்தி-அதிலும் கன்னிப் பெண் ஒருத்தி-அதுவும் பசித்த வயிறும் கொதித்த மனமுமாக மயங்கி விழுந்தாள்.என்றால், அதைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியுமா? ‘பலே செய்தி’ப் பகுதியில் செய்தி நிருபர்கள் பரணியை அடைத்துப் போட்டார்களோ என்னவோ? அரவிந்தன் என்ற ஓர் இளைஞன் தன் இதயத்தாளில் மேற்படி நிகழ்ச்சியைக் கவிதையாக வடித்து வைத்தான். இத்தகைய துணிகரமான செயலுக்குக் காரணம், அவன் கவியாக இருந்தான் என்று சொல்வதைக் காட்டிலும், அவன் இதயம் பெற்றவனாகவும் இளைஞனாகவும் இருந்தான் என்பதே சாலப்

63