பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பொருந்தும். இயற்கையை ரசிக்கிறான் எழுத்துக் கலைஞன். அப்படி யென்றால், இயற்கையின் அனுதாபத்திற்கு அவன் இலக்காகவும் ஆகின்ற ஒரு சூழலில்தான் மனிதாபிமானம் பேசத் தலைப்படுகிறது; கவிஞனுக்குத் தலைநிமிர்ந்து நின்று நடக்கவல்ல ஒரு வாய்ப்புக் கிட்டுகிறது. ஆக, அரவிந்தனுடைய இளம் கவி மனத்தில் பூரணி சம்பந்தப்பட்ட அந்நிகழ்ச்சி ‘காவிய மகிமை’ கொண்டுவிடுகிறது.

அரவிந்தன் இளைஞன். ஆயினும், சராசரி வரிசையின் வழி நிற்கும் சாமானியப்பட்ட இளைஞனா என்ன? ஊஹூம், இல்லவே இல்லை! அவன் ஓர் இலட்சியவாதி. தனக்காகக் கவலைப்படப் பழகாத ஒரு ‘புதுமைப் பிர கிருதி,’ புதிய புதிய குறிக்கோள்களை இதயத்தில் வாஙகிக்கொண்டு, அதன் சாட்டைச் சொடுக்கினால் பக்குவம் பெற்றுத் திகழத் துடித்த இளைஞன். காதலும் கனவு மாக, ‘தான் தோன்றித்தனம்’ மாறாமல் திரியும் எண்ணிறந்த இளையர் திருக்கூட்டங்களினின்றும் விலகியும் விலக்கியும் சென்று பழகிய - பழகுவதற்கு இயன்ற அரவிந்தன் ஓர் இளைஞன்!-அதிலும், தான் ஒர் இளமைக் கவி என்பதை நிரூபிப்பதற்கு அவன் பாடிய இந்தப் பாடல் ஓர் அடையாளக் குறியாக உதவாமல் தப்ப இயலாது.

“தரளம் மிடைந்து-ஒளி
தவழக் குடைந்து-இரு
பவழம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச்-சிறு
நெளிவைக் கடைந்து-இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து-சுவை

64