பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயற்கையின் திருவிளையாடல்களுக்குத் தலைவணங்கிப் பழக்கப்பட்ட ‘சராசரி மனித’னினின்றும் விலகி நிற்குமாறு அரவிந்தன் நாவலாசிரியரால் பணிக்கப்படுகிறான்.

அதனால்தான் பூரணியின் வானொலிப்பேச்சில் ஒலித்த வாசகங்கள் பல அவனது அடிநெஞ்சில் 'அடி' கொடுக்கவும் செய்வதாக ஒரு சப்பைக்கட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. "இறையுணர்வு பெருகப் பெருக உடம்பால் வாழும் வாழ்க்கை அலுத்துப்போகிறது-இந்த ஒரு தத்துவத்தைக் கொண்டே அரவிந்தனின் கனவு வாழ்க்கையைப் பறித்துத் தூர வீசி எறியவும் ஆசிரியர் தயங்கவில்லை.

உள்ளத்தால் வாழும் வாழ்க்கை ஓர் உன்னதம்தான். அதுவும் எப்படி?-வெறும் எழுத்தளவில்தான், ஏட்டளவில்தான்! இந்த ஒரு முடிவில்தான் பூரணி-அரவிந்தன் வாழ்க்கைக் குறிக்கோள்கள் ‘வெறும் கனவுகள்’ ஆகி விணாகியிருக்கின்றன.


குத்திக்காட்டுகிறாளா?

ஒரு கட்டம்:
இடம்: கோடைக்கானல்,
நேரம்: தனிமையின் இனிமைப் பொழுது.
பாத்திரங்கள்: பூரணி-அரவிந்தன்.
எதையோ நினைத்துச் சிரிக்கின்றான் அவன்.
அவள் அவனுடைய சிரிப்புக்குக் காரணம் கேட்கிறாள்.

அவன் சொல்கிறான் “உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய்.

66