பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நான் என்றாவது ஒரு நாள் களைப்படைந்து கீழேயே நின்றுவிடும்படி நேரிடலாம். அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக் கூடாது!”

இந்த உரையாடலுக்குப் பின்னர்தான் அவன் பூரணியின் வானொலிச் சொற்பெருக்கையும் எடைபோட முனைகிறான் : ‘...அன்றொரு நாள் கோடைக்கானலில் பூரணியை மணந்துகொள்ளுமாறு மங்களேசுவரி அம்மாள் என்னிடம் கூறியபோது, நான் எந்தக் கருத்துக்களைச் சொல்லி மறுத்தேனோ, அதையே பூரணியும் பேசுகிறாள். ஆனால் ‘ஊன்பழித்து, உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்’ என்று அவள் திருவாசகத்தைக் கூறும்போது, என்னுடைய மெல்லிய உணர்வுகளையும் இந்தச் சொற்களிலே புகழ்கிறாளா? அல்லது, குத்திக் காட்டுகிறாளா? ...’

பூரணி எனும் பெண்மையின் சக்தி அரவிந்தனின் உள்ளத்தின் உள்ளே சலனத்தை உண்டாக்காமல் இருந்திருக்கவே முடியாது. அந்த உணர்வுகளின் மன ஓட்டத்திற்குக்கூட ‘கட்டுப்பாடு’ விதித்து, அவனை வெறும் லட்சியப் பிண்டமாக ஆட்டிப் படைக்கத் துணிவு ஏற்ற ஆசிரியர், பூரணியின் சொற்களைப்பற்றி அரவிந்தன் ஆராயும் நிலையில் ‘குத்திக் காட்டுகிறாளா..?’ என்ற ஒரு கேள்வியை ஏன் போட்டுக் காட்டவேண்டும்?

நா.பா. அவர்களுக்கு உரித்தான ‘இலக்கிய மனச் சான்றின்’ குறிக்கோள் கற்பித்த பக்குவ நிலையையும் மீறி அரவிந்தன் கட்டறுத்துத் தளையுடைத்துச் சிந்திக்க முற்பட்டிருக்கிறான்-இந்தக் கட்டத்தில்.

உடம்பைப் புண் என்று கருதுகிறான் அரவிந்தன். ஆச்சரியம் மேலிட அவனை வாழ்த்துவோம். ஆனால்,

67