பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அவன் பூரணியை-ஆசாபாசங்களின் உள்ளடக்கமான பூரணியின் மனத்தைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு அவள் பொருட்டு ஆற்றிய கடமைகள் யாவை?

அவன் அவள் நெஞ்சில் எவ்வகையான இடத்தைப் பெற்றிருந்தான்?

அவள் மனத்தில் அவன் என்னென்ன ‘அவதாரம்’ கொண்டிருந்தான்?

கடைசியில் முடிவு என்ன?

‘கைகளில் தீபத்தை ஏந்திக்கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவில் ஒளி சிதறி நடந்து செல்லுவதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தார்கள்’ என்று முத்தாய்ப்பிடும் இம்முடிவு ‘இயற்கைத் தன்மையுடன்’ கூடிய முடிவுதானா?

அரவிந்தனும் பூரணியும் ‘இலட்சியக் காதலர்கள்’ அல்லது ‘சமுதாயப் பணியாளர்கள்’ என்ற பருவம் கடந்து, கணவன்-மனைவியாக ஆகிவிட்டிருந்தால், ‘குறிஞ்சி மல’ரின் ‘முடிவு’ இயற்கைப் பண்புடன் ஒட்டியதாக ஒட்டி நின்று உறவாடியிருக்க முடியாதா?

புதினத்தைப் படைத்தவர் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை.

என் கேள்விகளுக்கு உரிய விடைகளைப்பற்றி இனிமேல் விளக்க வேண்டும்.


முடிவின் விதி

புது மண்டபத்துப் புத்தக வெளியீட்டாளரின்பால் கனன்றிருந்த ஏமாற்றத்தீ கொடிவிட்டு எரிந்து கொண்-

68