பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டிருந்த மனநிலைப்பில் பூரணியின் கண்களுக்கு உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் ஏமாற்றுபவர்களாகவும், அத்தனை மனிதர்களும் மற்றவர்களுக்கு உதவாதவர்களாகவுமே பட்டது. இச்சமயத்தில், அப்பாவி அரவிந்தன் வந்து சேர்ந்தான். சூடான காப்பிக்கு வழியில்லை; சூடான மொழிகளை வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டியவன் ஆனான். புறப்படும்போது, “நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால், அதற்கு உலகமெல்லாம் புணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை,” என்று பக்குவமாக எடுத்துக்காட்டத் தயங்கவில்லை.

பூரணியின் நல்லுணர்வு மனம் விழித்தது.

பூரணியின் பெண்மை எழில்நலப்பண்பும் விழிப்புப் பெற்றது. ‘அரவிந்தன்’ என்று மெல்லச் சொல்லிப் பார்த்துக் கொள்வதிலே ஒரு திருட்டு மகிழ்ச்சி கிடைத்தது. தன்னைப்பற்றி அரவிந்தன் பாடிய வரிகளைப் படித்து மகிழ்வதில் வெளிப்படையான அக நிறைவு பெற்றாள் அவள். போதும் போதாதற்கு, அவன் தமிழ் நாட்டின் வயிற்றுப்பசியைக் குறித்து ஒரு பாட்டும் அழுது ஒப்பாரி வைத்திருப்பதைப் பார்த்ததும், இந்நாட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கலை எண்ணித்துடிக்க ஓர் ஆண் உள்ளமும் எங்கித் தவிக்கிறதெனும் நடப்பும் பிடிபடுகிறது. அவளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே அவனுடைய கையெழுத்தை அவள் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். இப்படிப்பட்ட பக்தையின் தலையெழுத்தை எப்படித்தான் மாற்ற மனம் துணிந்தாரோ மணிவண்ணன்?

அரவிந்தனிடம், தான் முகங்கடுத்துச் சுடுமொழி உதிர்த்த தவற்றுக்கு முகம் கொடுத்து மன்னிப்பு வேண்டி

69