பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யது தொட்டு, அவனது உள்ளந்தொட்டு, பிறகு உடல் தொட்டு - வெறும் உடல்தொட்டு உறவாடி மகிழ்ந்த நிகழ்ச்சிகளெல்லாம் கதை நிகழ்ச்சிகள்; அதாவது, பெருங்கதையை ஒட்ட உதவிய சிறு நிகழ்ச்சிகள். அவளுக்காக அவன் அடி உதைபட்டது, அவனுக்காக அவள் கண்ணீர் கொட்டியது, பிறகு தேர்தல் போட்டா போட்டியின் போது நடைபெற்ற தலைவலிச் சம்பவங்கள் எல்லாம் சர்வசாதாரணமானவையே.

ற்றொரு கட்டம்; திட்டம்.

பூரணியைத் தேர்தலில் நிற்கும்படி செய்வதற்கான ஓர் ஆலோசனைக்கு இடையே பூரணியின் சார்பில் வாதம் புரிகிறான் அரவிந்தன். அதாவது, அவளை அவ்வாறு உடந்தையாக்கலாகாது என்பதே வாதத்தின் வெளிப் பொருள். அப்போது அவனுக்காகப் பரிந்து பேச முற்படுகிறார் நம் நா.பா. “அவன் அவள் உள்ளத்தோடு இரண்டறக் கலந்தவன். வேறெவருக்கும் இனி என்றும் கிடைக்கமுடியாத இனிய உறவு அது. அந்த உறவை வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ள அவன் எப்போதுமே விரும்பியதில்லை!”

ஆண்-பெண் என்கிற இரு பெரும் சக்திப் பிண்டங்களினின்றும் தழுவி நழுவுகின்ற ஒரே இணக்கம் கொண்ட உணர்வுகள் உறவுகொள்வதென்பது விட்ட குறை-தொட்ட குறையின் விதி எனும் மாயத்தினால் விளைகின்ற ஒரு பயன். உள்ளத்தின் உள்ளே எண்ணி மகிழ்ந்து பரவசப்பட வேண்டியதொரு விசித்திரமான அனுபவம் இது. இதற்கு அவன் விளம்பரம் தேட வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது? ஒன்றும்

70