பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லை! அரவிந்தனின் குணச்சித்திரத்திற்கு விழுந்திருக்கிற கீறல் இது.

மீளவும், கோடைக்கானல். கடல் கடந்து ஆற்ற வேண்டிய சொற்பொழிவுகளை ஏற்பதா, வேண்டாமா என்னும் சிக்கலில் அகப்பட்டுத் தவிக்கிறாள் பூரணி. அது தருணம், அவள் இவ்விதமாக நினைக்கிறாள்: “அரவிந்தன்! எனக்காக நான் எதைச் சிந்தித்தாலும், அந்தச் சிந்தனையின் நடுவில் என் உடம்பிலும் நெஞ்சிலும் சரி பாதி பங்குகொண்டவர் போல இவர் ஏன் நினைவுக்கு வருகிறார்? அரவிந்தன், என்னுடைய ஊனிலும் உயிரிலும் அதனுள் நின்ற உணர்விலும் எல்லாவற்றிலும் நீங்கள் எப்போது கலந்து உறைந்தீர்கள்? எப்படிக் கலந்து உறைந்தீர்கள்?”

அரவிந்தனுக்கு வாய்த்துவிட்ட ‘முடிவின் விதி’யை எண்ணுகிறேன்; சுடு நீர் சரம் தொடுக்கிறது. முடிவுக்கு உண்டான தொடக்கத்தைப் பற்றிச் சொல்லிக்காட்ட வேண்டுமல்லவா?


நடமாடும் கவிதை

பூரணி ஒரு நடமாடும் கவிதை.’

ஆண்-பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே கையில் தீபம் ஏந்திச்சென்று, உலகத்தில் நிலவுகின்ற பசியையும் நோயையும் அழிக்க வேண்டுமென்பது அவள் கனவு. இப்படிப்பட்ட சேவை மனப்பான்மையின் பேருணர்வே அவளுள் கனிந்து கனன்ற ‘தன்விழிப்பும்’ ஆகும். இவ்வகையில் தோன்றிய பூரணிக்கும், பொன் காட்டும் நிறமும் பூக்காட்டும் விழிகளுமாக அவனைக்

71