பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிபாடத் தூண்டிய பூரணிக்கும் ஊடாகத் தவித்த அரவிந்தனைச் சோதனை ஒன்று நெருங்குகிறது. சோதனை மக்களேசுவரி அம்மாள் வாய்வழியே புறப்படுகிறது. அரவிந்தன்-பூரணி திருமணங் குறித்துப் பேச்சுத் தொடுக்கிறாள். “அவருக்கு விருப்பமானால், எனக்கும் விருப்பம்” என்ற பூரணியின் ஒரு வழிப்பட்ட இணக்க மொழியைக் கொண்டு அந்த ‘அவரி’டம்-அதாவது, அரவிந்தனிடம் கேட்கும்போது, அரவிந்தன் ‘வசனம்’ ஒப்புவிக்கின்றான். அந்தப் பேச்சைக் கேட்டபோது, எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோடைக்கானலில் குறிஞ்சிப் பூக்களுக்கு மத்தியில் அவனும் அவளும் நெருங்கிப் பழகிய பந்தத்தை நான் அறியேனோ? அபலைப்பெண் பூரணியின் ஆசை மனத்தின் இனிய எழிற் கனவைப் பலிதமடையச் செய்திருக்கவாவது, அரவிந்தனிய வாழ வைத்திருக்க வேண்டாமா நா.பா...?

“நாங்கள் இரண்டு பேருமே உயரத்தில் ஏறிச் செல்கிறோம். அதற்கு இந்த வாழ்க்கைப் பிணைப்பு மட்டுமே போதும்; என்னை வற்புறுத்தாதீர்கள்!” என்றான் அரவிந்தன்.

இவ்வகையில் அமைந்துவிட்டிருக்கின்ற சொல்லாடல் நிகழ்ச்சிகள் அரவிந்தன் எனும் குணச்சித்திரத்திற்கு எவ்வகையான சாரமும் தரமுடியாது. கொள்கைகளுக்காக மனிதன் வாழலாம்; ஆனால் கொள்கைக்காக அவன் வாழ்வை இழக்கக்கூடாது. கொள்கைகள் வாழவேண்டுமெனில், ‘கொள்கையின் மனிதன்’ வாழவேண்டும். அது மாதிரி, இங்கே அரவிந்தனும் வாழ்ந்திருக்க வேண்டும். பூரணியும் ‘வாழ்ந்திருக்க’வேண்டும். இருவர்தம் வாழ்வு நிலைகளும் வெற்றி பெற்றிருந்தால்-அவர்கள் மண்ணில்

72