பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல வண்ணம் வாழ்ந்திருக்கும்பட்சத்தில், அவர்களது அடிப்படை இலட்சியங்களும் மேளதாளத்தோடு வெற்றி பெற்றிருக்கக் கூடும். இதன் பயனாக, இலட்சிய இளைஞன் அரவிந்தன் முழுமை பெறுவதுடன், பூரணிக்கும் பூரணத்வம் கிட்ட நல்வாய்ப்புக் கிட்டியிருக்கும்.

அரவிந்தன் சாகவில்லையா?

பாவம்...!


திலகவதி-பூரணி!

செல்லரித்த பழமையெல்லாம் சீர்திருத்த முன்வந்த இலட்சியச் சித்தன்’ அரவிந்தன் தெய்வமாயிருந்தான்.

‘நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்’ திலகம் இழந்தது.

திலகவதியின் கதை முடிந்தது; மீண்டும் நடந்து முடிந்தது!

திருமண ஊர்வலங்களுக்குப் பயன்தரும் வெண் புரவிச் சாரட்டு, கடைசியில் ‘அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கையை’ மண்ணிற் கலக்கச் செய்யப் பயன்தந்த அந்த ஒரு திருப்பத்தில், தமிழாசிரியர் நா.பா. வைவிட நாவலாசிரியர் மணிவண்ணன் கம்பீரமான பெருமையுடன் வாழ்வார்; அட்டியில்லை.

திரு க.நா. சுப்பிரமணியம் சொல்கிறார், “மனத்தில் நிற்கும்படியாக ஒரு வார்த்தை-ஒரு வாக்கியச் சேர்க்கை இந்த ஐந்நூறு பக்கங்களில் உண்டா? அதுவும் கிடையாது. அதற்கு நேர்மாறாக, நடையே தள்ளாடுகிறது!” என்று.

73

அ—5