பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. நளினி
-க. நா. சுப்பிரமணியம்—

புதுமைப்பெண் அல்லள் நளினி. திருடனைக் கணவனாகக்கொள்ள முடியாமல் ஓடிவிட்ட பெண்! அவள் பாவாடைகட்டிய சிறுமியாக இருக்கும்போது, சீதாராமன் என்னும் கதாநாயகன் பருவதத்தம்மாள் என்கிற தன் மூத்த சகோதரி வீட்டுக்கு வண்டியில் வந்து இறங்குகிறான். பாவாடைகட்டிய “வளர்ந்த” பெண் நளினி, எதிர்வீட்டில் நிற்கிறாள்.

நளினி தாயை இழந்தவள்; ஒரு வகையாக வளர்ந்தவள், முரட்டுப் பிடிவாதத்துடன்! கையில் சின்னம்மாவின் குழந்தையுடன் நிற்கிறாள். “அதோ பாருடா பட்டணத்து மாமா!” என்கிறாள் குழந்தையிடம். “தேவலையே ! வாயாடிப் பெண்ணுக இருக்கும்போலிருக்கே! வளர்ந்த பெண்ணுகவும் இருக்கிறதே!” என்று - சொல்லிக்கொண்டே போகிறான் சீதாராமன், அந்தப் பட்டணத்து மாமாவையே மணந்து கொள்கிறநிலை நளினிக்கு வந்துவிடுகிறது.

86