பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“அதெப்படி சாத்தியம்?” என்கிறாள். நளினி. கடைத்தெருவுக்குப் போய் மீண்டதும் வெளிக்கதவு தாளிடாமலே சாத்தியிருந்தது. “நளினி” என்று அழைக்கிறான் சீதாராமன்.

—“எவ்வளவு சாமர்த்தியசாலிதான் ஆனாலும், ஓர் அயோக்கியனுடன் வாழ நான் விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவு அல்ல இது. என்னைத் தேட வேண்டாம். நான் விஜயபுரம் போகவில்லை!” என்று கடிதம் எழுதி இருந்தாள் நளினி.


அழியாக் கனவு

விஜயபுரம் என்று ஓர் ஊர், அங்கே ஓர் அக்கிரகாரம்; அங்கே பெண் ஒருத்தி; பெண் அல்ல. கன்னி. அவள் பெயர் நளினி. நளினமான பெயர்தான். அவளுக்குத் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ‘அழியாக்கனவு’களைக் கண்டுகொண்டிருப்பதுதான் அன்றாட அலுவல், அந்த அலுவலுக்கு உயிரூட்டுகிறது சீதாராமன், சீதாராமன் என்ற இளைஞனின் வருகை. நளினியை இரண்டு முறை பார்த்து, அதன் விளைவாக அவனுக்கு விளைந்த துன்பங்கள் அதிகம். அதனால்தானோ, என்னவோ, அவளை அவன் தன் உரிமையாக்கிக் கொள்கிறான். ஆனால், அவளுக்கோ அவனது வாழ்வில் புதைந்து கிடந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு மிஞ்சுகிறது. உள்ளத்தின் தற்காப்பு உணர்ச்சி (Self— preservative—instinct) இது. அவளால் அன்பு சொட்ட அழைக்கப்பட்ட ‘பட்டணத்து மாமா’வான சீதாராமன், “அந்தப் பழைய

89

அ–6