பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


யடையாமல், உள்ளத்தாலும் வளர்கின்ற பக்குவத்தை - மனத்திட்பத்தை - ‘நளினி’ மூலம் பரிசோதனை செய்து, பார்த்தார் க. நா. சு. விளைபலன்: தோல்வி! படுதோல்வி!


சூள்!

வாசகர்களின் மனோதர்மத்துக்குக் கதையின் முடிவைக் காணிக்கை வைத்துவிட்டு எழுத்தாளன் விலகி நிற்பது புதிய உத்திதான்; கோடிட்டு, ‘கோடி’ காட்டும் உட்குறிப்பு (subtle suggestion) இது. இத்தகைய முடிவுக்கு ஓர் தொடக்கம், வளர்ச்சி, இடைநிலை, கதைப் பிண்டத்தில் ஓர் அழுத்தம், உருவாக்கும் தலைமைக் கதாபாத்திரங்களிலே ஒரு தனித் தன்மை போன்ற பண்புகள் பொலிவு காட்ட வேண்டும். ‘நளினி’யில் நளினியைத் தவிர, மற்ற எல்லாப் பாத்திரங்களும் வெறும் அண்டா, குண்டான், குடம் வகையறாத்தான்! பத்து வயசுப் பெதும்பைப் பருவத்தில் நளினி அழகு காட்டுகிறாள். திடீரென்று பதினைந்து ஆகிறது: வயசில் சின்னம்மாவுக்கும் சாஸ்திரிகளுக்குமே தகராறு. எப்படியோ, அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ‘போலி மனிதனாக’ ஆக்கிவிட்ட சீதாராமனிடம் எப்படித்தான் நளினியை ஒப்படைக்கத் துணிந்தாரோ நம் க.நா. சு.?

சீதாராமன் நல்லவனோ, கெட்டவனோ, நாம் அறியோம், பராபரமே! அது க. நா. சு. அவர்களின் பேனாவுக்குத்தான் வெளிச்சம். ஆனால், நளினி தன் வாயால், ‘அவர் வண்டியிலேருந்து வந்து இறங்கச்சே நான் பார்த்தேன்; நன்னாத்தான் இருந்தார்!’ என்று பரிந்து பேசுவதைப் பார்க்கையில், அவன் ஆணழகனாகத்தான் இருக்கவேண்டும். அவன்-அவர் சீதாராமன். ஆனால் இந்தச் சீதா

91