பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெண்களுக்குத் திருவிழாப் பார்ப்பதில், அதிக ஆர்வ மிருக்கலாம். தன்னுல் அழைத்துச் செல்ல இயலாதெனி னும், பல பெண்களோடு கூடச் சேர்ந்து போவதை அது மதிக்கும் தாராளம் சிறிதாவது வேண்டும் கணவனுக்கு. பெண்களுக்குப் பிறந்தகத்துப் பெருமை அதிகம், பிறந்த வீட்டுப் பற்றுதலும், பிறந்த வீடு செல்ல வேண் டும் என்ற துடிப்பும் அதிகம். இது பெண்களின் தன்மை கள் என்று கருதினுலும் சரி. தவறுகள் என்று மதித்து மன்னித்து விட்டாலும் கல்லதே. மனைவி எப்பொழு தாவது பிறந்தகம் செல்ல மிகுதியாக ஆசைப்பட்டால் அவளுக்கு மகிழ்வுடன் அனுமதி யளிப்பதன் மூலம் கஷ்டமோ கஷ்டமோ எழாது. ஆணுல் போக விடாமல் கண்டிப்பு பண்ணிஞல், அவளுக்கு அவசியம் மனக் குறை எழும். அது வாழ்வில் பிரதிபலிக்காமல் போகாது. அவள் பெருமையாக மதிக்கிற பிறந்த வீடு, அதன் சிறப்புகள், உறவினர்களைப் பற்றி சக்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பங்களிலும் மட்டம் கட்டி, மண்டையிலடித்து அவளைத் தலை குனியும்படி செய்ய வேனும் என்ற துடிப்பு கணவனுக்கு அழகு தருவது மல்ல, வீட்டில் அமைதிக்கு வழி செய்வது மல்ல. அதற்காக மனைவியும் எடுத்ததற்கெல்லாம் எங்க வீட்டிலே அப்படி...எங்க வீட்டிலே இப்படி என்று பித்திக்கொண்டு கிரிவது சரியாகாது. அடிக்கடி அம்மா வீட்டுக்கு ஒடுவதும் அழகல்ல. கல்யாணத்துக்குப் பிறகு கணவன் வீடு தன்னுட்ைய வீடாகி விட்டது; அதனுல் எங்க வீடு....எங்க விடு என்று எங்கேயோ தனக்குச் சொத்தம் பாராட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர வேண்டும். பொருளாதாரம் இடமளிக்குமானுல், மனைவியை அழைத்துக் கொண்டு புது இடங்களுக்குப் போய் வரு வதன் மூலம் இருவருக்கும் புதிய உற்சாகமும் உன் மகிழ்ச்சியும் உண்ட க்கிக் கொள்ளலாம். காட்டின் முக்கிய இடங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்ற ஸ்தலங் &