பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஆண்கள் நண்பர்களோடு தங்களுக்கு வரும் மனைவி எப்படி யிருப்பாள். எப்படிய யிருக்க வேண்டும் என்று பேசி மகிழ்கிறார்கள்.மணமானதும் முதன் முதல் மனைவியிடம் எப்படிப் பேசிப் பழகுவது என்று மனத்திரையில் ஒத்திகை பண்ணிக் கொள்கிறாராகள்.ஆனால்,அனேகமாக அவர்கள் ஆசை அனைத்தையும் யகர்த்தெறிவதாகவே அமைகிறது கல்யாணம்.

 கண்ணியர் ஒத்த வயதுக் குமாரிகளாகக் கூடினால் வாலிபர்களைப் பற்றியும், தங்கள் தோழியர்களின் மண வாழ்வு பற்றியும் பேசி தங்களுக்குள் கேலிசெய்து, மன அரிப்பை வளர்த்து வந்தாலும், கல் யாணம் அவர்கள் ஆசையில் மண்ணைப் போட்டு விடுகிறது. 
 எங்கோ இருந்த ஒருவனையும், எங்கோ இருக்கிற ஒருத்தியையும் வாழ்வு முழுதும் ஒன்று பட்டு, வாழ்க்கை நடத்தி, இஷ்டம் போல் உழன்று, சந்தர்ப்பத் தொல்லைகள்'-தவிர்க்க முடியாத விபத்துகள் என்று எண்ணும்படியாகப் பிறக்கும் குழந்தைகளை வளர்த்து, குடும்பம் பெருக்கி, அவற்றின் பாதுகாப்புக்குப் பொருள்தேட அலைந்து, கவலை வளர்த்து,அதனுலே அமைதி குலைத்து, மனொ திருப்தி இழந்து, தக்களு வாழ்வையும் வேறு பலர் வாழ்வையும் சீரழித்து, மண்ணாகும்படி செய்கிற 'குறளி வித்தை' தான் கல்யாணம்-இன்றைய நிலலயிலே !
 ஆதலின், அவன் என்ன தான் மன்மதனாக, அர்ஜுன ரசனை வளர்த்து அலைந்தவனாக இருந்தாலும், அவள் ரதியாகவும், காமக் கலைவாணியாகவும் இருந்தாலும் கல்யாணம் நெருக்கடியான பரீட்சையாகத்தான் அமைகிறது. அக்னிப் பரீட்சையான அது சிலரைப் புடமிட்ட தங்கமாக்குகிறது. பலருக்கு வாழ்வைக் கறுக்கும் விஷப் பரீட்சையாகி விடுகிறது.