பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 12 ரகமான காதல்கள் உண்டோ, அவற்றினு படி நடக்கிற கல்யாணங்கள் கூட நிரந்தர இன்மை மயப்பதாக இல்லை.

 காதல் என்பது காமத்தின் மேல்பூச்சு. காமம் என்கிற தேக இச்சையின், சதை அரிப்பின் ஆசைக்கான கலையான பெயர் தான் காதலு. அது தெய்வீகம் , புனிதம், அமரத்துவமானது என்பதெல்லாம் சுத்த ஹம்பக். வீண் பேத்தல்.
 இத்தகைய மயக்க நிலையிலே நிகழும் கல்யாணங்களும் அரிப்பு தீர்ந்து போதை தெளிந்ததும், மனப் பிணக்கில் இறங்கி, முறிந்து போகின்றன.
  நம் நாட்டில் அவனும் அவளும் பிணைக்கப் பட்டாலு ம் இணைந்தே போக வேண்டும் என்ற தார்மீகச் சட்டம் கல்யாணத்தின் மூலம் வலியுறுத் படுவதால், மனப் பிணக்கு ஏற்பட்டாலும் குடும்பத்தில் 'கொண்டு செலுத்த' வேண்டிய நிலை நீடிக்கிறது.சில குடும்பங்களில் புருஷனும் மனைவியும் நாயும் பூனையுமாக வாழ்வதும் இந் நெருக்கடியினால் தான்!
 விவாக ரத்து உரிமை வேண்டியது தான். ஆனால், அமெரிக்கா (ஹாலிவுட்) அனுஷ்டான முறை வேண்டாம்அது தனி மனித வாழ்வை சீர்கேடடையச் செய்கிறது. சமூக வாழ்வில் மனிதத்தனம் மேலும் மேலும் கெட்டு, குடும்ப வாழ்வு குட்டிச் சுவராகப் போகும்படி செய்கிறது.
 தாம்பத்ய வாழ்வு இன்பமானதாக விளங்க, மனதை மட்டும் திருப்திப் படுத்தினாலும் போதாது. உடல் திருப்தியை மட்டுமே முக்கியமானதாகக் கருதினாலும் சரிப்படாது. அவனும் அவளும் ஒத்த பண்பின்பினராக அமைய வேண்டும்.