பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 13

 பொதுவில் அப்படி அமைவதில்லை யென்றால், 'பெண்பார்க்கும்' -'மாப்பிள்ளை தேடும்' பெரியவர்கள் செய்கிற தவறுதான் காரணம். சில சமூகங்களில் பெண் பார்த்தல் என்ற வழக்கம் வெறும் கேலிக் கூத்தாகவும் கண்துடைப்பு ஆகவும் உள்ளது. பல இனத்தார்களிடையே இந் நாடகம் இல்லவே இல்லை. 
 இளைஞனின் விருப்பங்களை, அவனது மனப்பரிபக்குவங்களை, உடல்-குண-நலங்களே ஆராயாமலே எவளையாவது பிடித்து கல்யாணம் செய்து வைப்பதும், பெண்ணின் தன்மைகளையும் தவறுகளையும் ஆசைகளையும் உணராமல் பணத்துக்கும் படாடோபத்துக்கும் அந்தஸ்துக்குமென்று எவனுக்காவது மணம் செய்வதும் வாழ்வைப் பாழடிக்க உதவும் கொடியேற்று விழா தான்.
 யுவனும் யுவதியுமாகப் பார்த்து, தாங்களே முடிவு பண்ணிக்கொள்வது கூட விபரீதங்களில் முடிவது உண்டு. 'நான் உனைமறவேன்........நான் உனைப்பிரியேன். நாம் கல்யாணம் செய்து கொள்வோம்’ என்று சத்தியம் செய்து தனியாகக் கூடி இன்புற்றுப் பின் அவள் வயிற்றிலே பாரம் ஏறியதும் அவளைத் தெருவிலே திண்டாட விட்டு விட்டு அவன் ஓடிவிடுகிற கயவாளித்தனங்களாகவே மலர் கின்றன இவ்விதத் தொடர்புகள். இதனால் குழந்தைக் கொலைகளும், தற்கொலைச் சாவுகளும் பெருகி வருகின்றன.
 பலவகைகளையும் யோசிக்கும்போது, பெரியவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து, சகலவற்றையும் ஆராய்ந்து தேர்ந்து நடத்தி வைத்து அவசியமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கி வாழ்வு வகுத்துக் கொடுக்கும் கல்யாண முறையே நல்லது என்று எண்ணத் தோன்றுகிறது. இம்முறை அவனுக்கும்.