பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அவளுக்கும் பொறுப்பு உணர்ச்சியையும் இணைப்பையும் உண்டாக்குகிறது.அவனும் அவளும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு பரஸ்பரம் மகழ்வு பெறும் தன்மையில் வாழ்ந்து, சுயநலத்தைச் சிறிது அகற்றி, மனநிறைவுடன் காலம் தள்ளும்போது, வாழ்வில் இன்பம் கிட்ட இடமேற்படுகிறது.பழகப் பழக முதிரும் நட்பு போல இவர்களும் வாழ்வில் நல்ல துணைவர்களாக அன்போடுவாழ முடியும்.

 ஆமாம்.வாழ முடியும் 

என்பது சரிதான். ஆனால், வாழ்க்கை இப்படி இருக்கிறதா என்ற கேள்வி எழவே செய்யும்.

 கல்யாணம் வாழ்வுப் பிரச்னை, ஆணும் பெண்ணும் இன்பமாக வாழச் செய்து கொள்கிற ஒப்பந்தம் என்பதை மறந்து, வெறும் கேலிக் கூத்தாகவும், 

சிறுபிள்ளை விளையாட்டுப் போலவும் மாறியுள்ள நிலையிலே உண்மையான அன்பும் ஆர்வமும் அற்றவர்கள் நீடித்த நட்புடன் நற்றுணைவர்களாக வாழ்வது எப்படி? அவர்கள் அவ்விதம் வாழ முடியும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும் ?

 சில சமயங்களில், கல்யாண தர்மப்படி கணவன் மனனவியாகி விட்டவர்களிடையே நிலவும் தாம் பத்ய உறவை விட கல்யாணம் செய்து கொள்ளாமலே இஷ்டம்போல் சேர்ந்து வாழ்கிறவர்களின் 'வைப்பு' உறவிலே, ஆண் பெண்ணிருவரிடமும் ஆழ்ந்த உறவும் தூய அன்பும் மிளிர்வதை வாழ்வில் காண முடிகிறது.
 அன்புத் கொடி தழுவாத மணவாழ்வை விட, அன்பு துளிர்த்து மலர்ச்சியுற்று விகசிக்கிற கூட்டு வாழ்வு எவ்வளவோ சிறந்தது. ஆணும் பெண்ணும் ஜோடி சேர்வதிலே-சேர்த்து விடப் படுவதிலே-முதலிலேயே எல்லாவித நோக்கிலும் ஆராய்ந்து