பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

 மனிதகுல வாழ்வு மாண்புற, சமுதாய வாழ்க்கை சிறப்புற, தண்ணித வாழ்வு நலம் பெற,வாழ்வின் முக்கியப் பிரச்னையான கல்யாணமும் கல்யாண முறைகளும் சரியான முறையிலே அமைக்கப்படுதல் அவசியம்.
 
 கல்யாணம் வாழ்வின் இனிமையைக் கெடுப்பதாக இருக்கக் கூடாது. வாழ்விலே இன்பமும் மணமும் வளமும் நல்குவதாக அமையவேண்டும். இளைஞர்களும் பெரியவர்களும் அதற்கு ஆவனவற்றைக் கவனிக்க வேண்டும்.