பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 5

 ஆகவே, சமூகம் என்கிற கன்ட்ரோலர் 'இந்தப் பெண்தான் உனக்கு இந்த ஆண் கூடத் தான் நீ வாழ வேண்டும்' என்று அவசியத்துக்கு ஏற்ப ஆணுக்கும் பெண்ணுக்கும் ரேஷன் செய்து அளிக்கிற பெர்மிட் தான்-லைசென்ஸ் தான்-கல்யாணம் என்று கூறலாம். ஆனாலும், எப்பவுமே 'பிளாக் மார்க்கெட் பிஸினஸ்' சர்வ வல்லமை பொருந்திய தாக இருப்பதனாலே, கல்யாணப் பெர்மிட் பல முறை வெறும் பேச்சாகப் போய் விடுகிறது. அவன் இஷ்டம் போல் கெட்டலைவதிலும், அவன் ஊர்ப் பெண்களிடம் விளையாடுவதிலும் ஈடு பட்டு விட முடிகிறது.
 கல்யாணம் இன்பம் கொடுக்கும் சாதனம் என்பது மாறி இன்பத்தைக் கெடுத்து வாழ்வைச் சீரழிப்பதாகி விடுகிறது. பெண்களில் பல 'வாழாவெட்டி' களையும் விபசாரிகளையும் சிருஷ்டித்து விடுகிறது. ஆண்களின் குணத்தையும் கலத்தையும் கெடுத்து விடுகிறது. இதனால் சமுதாய நலமே பாதகமடைந்து வருகிறது. 
  இதன் காரணம் என்ன ?
  எவ்வளவோ?
 மனப் பொருத்தமில்லை அதன் அடிப்படை உடற் பொருத்தம் சரியாக யில்லை. அதனால் மணத்திலே இன்பம் பொரருந்தவில்லை. இருவரும் பிணங்குகிறார்கள். மணத்தின் மூலம் இன்பம் பெறாதவர்களின் மனம் வேறு ஜோடி தேடி இன்பம் நாடத் தவிக்கிறது.
 இந்தத் திருப்தி யின்மை, பொருத்த மின்மைகள் முக்கிய காரணம் தான் எனினும் வாழ்விலே மாறுபாடு எழ இவையே தனி முதல் முழுக்காரண மாகிவிட முடியாது. மனதையும் சுற்றுச் சார்பையும் பொறுத்திருக்கிறது மணம் இன்பமாக மாறுவதும், மங்குவதும்.