பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 7

  வாழ்வுக் கொடியிலே பருவத் தென்றலின் வருடுதலால் இன்ப மணம் நிகழ்கிறது.
 அதற்கு முன்புவரை ஆண் கண்டபடிகனவுகள் கண்டு வந்திருப்பான், 'பெண்னும் எப்போ வருவானே?' என்று ஏங்கித் தவித்திருப்பாள்.
 தனக்கு வரப்போகும் மணமகள் எப்படிஇருக்க வேண்டும் என்று ஆண்மனம் தானாகவே கோட்டை கட்டுகிறது. தனக்கு வசீகரமாகத் தோன்றும் சினிமா கட்சத்திரம் போல் இருக்கலாம்; ரயிலிலோ பஸ்ஸிலோ, வீதியிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேறோர் கல்யாண வீட்டிலோ-எங்கோ எப்பொழுதோ கண்ட எவளாவது ஒரு பெண்ணை மாதிரி இருக்க வேண்டும் தனக்கு வரும்வாழ்க்கைத் துணைவி என்று இளம் உள்ளம் நினைக்கிறது. எதிர் வீட்டுப் பெண் மீதும் பக்கத்துவிட்டுப் பாவை மீதும் பார்வையும்ஆசையும் பாய்கிறது. இவ்விதம் பெண்களைப் பார்ப்பது சிரிப்பது, கண்ணடிப்பது, கேலி பேசுவது, லீலைகளாடத் துணிவது எல்லாம் சிறு பிள்ளை விளையாட்டுகளாக ஒதுக்கப்பட்டு விடுகின்றன கல்யாணம் என்கிற தடையினால்-தார்மீகக் கட்டுப்பாட்டினால்.


 பெண்ணும் அப்படித்தான். தனக்குத் தெரிந்த அழகன் எவனையாவது போல, தன் மனம் தொட்ட சினிமா நடிகன்போல், தனது உறவினன் ஒருவன் போல், தனக்கு வாய்க்கும் மணாளன் அழகனாய் தன் மீதே பூர்ண அன்பும் செலுத்துகிறவனாய் தன்னை இன்புறுத்துபவனாய், தனது வாழ்வில் மகிழ்வு,மணம் என்றும் திகழச் செய்கிறவனாய், தன் ஆசைகளை அன்புடன் நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டும் எனக் கனவு காண்கிறாள். அத்தகைய அன்பன் வரவுக்காகப் பெருமூச்செறிந்து காத்திருக்கிறாள்.