பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 6 "நல்லோரைக் காக்கவும் தியன செய்வோரை அழிக்கவும் அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்" என்பது கீதா வாக்கியம். இவ்வாறு ரீமன் நாராயணன் பல அவதாரங்கள் எடுத்து இப்பூமியில் அறத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். திருமாலின் இந்த அவதாரப் பெருமைகளைப் பற்றி வியாச பகவான் எழுதிய ரீ பாகவதம் என்னும் புனித நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது. திருமாலின் இந்த அவதாரங்களில் தசாவதாரங்கள் முக்கியமானவை. திருமாலின் இந்த அவதாரப் பெருமைகளைப் பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் மிகுந்த பக்திச் சுவையுடன் எடுத்துக் கூறுகிறார்கள். திவ்யமான அந்தப் பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்த நூலில் காணலாம். பகவத நூல் எடுத்துக் கூறியுள்ளபடி பரசுராமரின் வரலாற்றைப் பற்றி இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. சர்வவல்லமை பெற்றிருந்த கார்த்த வீரியார்ஜுனன் என்னும் மன்னன் தனது அகர பலத்தின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டிருந்தான். அதனால் பல அட்டகாசங்களும் கொடும் செயல்களும் செய்து கொண்டிருந்தான். தனக்கு நிகர் யாருமில்லை என்று மகா ஆணவம் கொண்டிருந்தான். யாராலும் அவனைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் தன்னுடைய படை பலத்தின் மூலம் ஜமதக்கினி முனிவரின் ஆஸ்ரமத்தில் இருந்த தெய்வீகப் பசுவை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டான். அதனால் கோபம் கொண்ட பரசுராமன், தனது தெய்வீக ஆயுத பலத்தால், கார்த்த வீரியார்ஜூனனுடைய நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று, அவனையும், அவனுடைய படைகளையும், கொன்று அவன் அபகரித்துச் சென்றிருந்த தனது ஆஸ்ரமத்தின் தெய்வீகப் பசுவையும் மீட்டிக் கொண்டு வந்து விட்டான். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கார்த்த வீரியார்ஜுனனுடைய பிள்ளைகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, தங்கள் தந்தை கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் ஜமதக்கினி ஆஸ்ரமத்திற்கு படைகளுடன் வந்து ஜமதக்கினி முனிவரின் கழுத்தை வெட்டித் தலையைக் கொண்டு போய்விட்டார்கள்.