பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 8 எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று கூறி தனது அவதாரக் கடமைகளை முடித்துக் கொண்டு பரசுராமர் தவம் செய்ய மீண்டும் மலையடிவாரத்திற்குச் சென்றுவிட்டார். இந்த புக சந்திப்பின் சிறப்பு அதன் வரலாற்று முக்கியத்வம் பற்றி இந்த நூலில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. பரசுராமனும்-கல்யாணராமனும் என்னும் தலைப்பில் அருப்புக்கோட்டை கம்பன் கழகத்தில் அடியேன் ஆற்றிய சொற்பொழிவுக்காகத் தயாரிக்கப்பட்ட குறிப்புகளைத் திரும்பவும் பார்த்தபோது இக்கருத்துக்களைக் கொண்ட ஒரு சிறு நூலையே எழுதிவிடலாம் என்று கருதி எழுதி முடித்தேன். இதன் அச்சுப்பின் நகலை, அருப்புக் கோட்டை கம்பன் கழகத் தலைவரும் ஆன்மீகச் செல்வரும் சிறந்த தேச பக்தரும் தொழிலதிபருமான உயர்திரு. டி.ஆர். தினகரன் அவர்களை நேரில் சென்னையில் சந்தித்து அவரிடம் காண்பித்து இதை நூலாக வெளியிடுவதற்கு நான் செய்து வரும் ஏற்பாடுகளைக் குறிப்பிட்ட போது, அன்னார் என்னை பாராட்டி தனது ஆதரவையும் தெரிவித்தார். அவருக்கு எனது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை சிறந்த முறையில் அச்சு வடிவமைத்தும் அச்சடிக்கவும் ஏற்பாடு செய்த எனது நண்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகும். இதை அன்பர்கள் வாங்கிப் படித்து பயன்பெற வேண்டுகிறேன். அ. சீனிவாசன் நூலாசிரியர்