பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும் 1. தோற்றுவாய் பரசுராமனும் றுரீ ராமனும் திருமாலின் அவதாரங்கள். இவ்விரு பெருமாள்களின் அவதாரப் பெருமைகளைப் பற்றியும் அவர்களுடைய அரிய செயல்களைப் பற்றியும் சாதனைகளைப் பற்றியும் நமது இதிகாசங்களும் புராணங்களும் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. பாகவத புராணம் இரு அவதாரங்களைப் பற்றிய வரலாறுகளையும் விவரித்துக் கூறுகிறது. ஆழ்வார்கள், பரசுராம அவதாரத்தின் பெருமைகளையும், இராமாவதாரத்தின் சிறப்புகளைப் பற்றியும் தங்களுடைய பல பாசுரங்களிலும் பெருமைப் படுத்திப் பாடியிருக்கிறார்கள். பரசுராமனைப் பற்றிய குறிப்புகள் இராமயணத்திலும் மகாபாரதத்திலும் வருகின்றன. பாகவத புராணத்தில் பரசுராமரின் வரலாறு விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. திருமாலின் அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தசாவதாரம்) மிகவும் சிறப்பானவைகளாக குறிப்பிடப்படுகின்றன. பரசுராமரின் அவதாரச் செயல்கள் வீரமும் தீரமும், வேகமும் ஆவேசமும், வரலாற்றுச் சிறப்புகளும் சமுதாய சிறப்புகளும் அரும் செயல்களும் நிரம்பியவை. யார் குற்றம் செய்தாலும் அதைத் தண்டிக்கும் நேர்வழி கொண்டவை. இராமாவதாரம் திருமாலின் பூரணாவதாரம் என்றும் கிருஷ்ணாவதாரம் பரிபூரணாவதாரம் என்றும் சிறப்பு கொண்டவையாகும். ரீராமனுடைய வரலாறு பற்றியும் ஆட்சி பற்றியும் பாரத நாட்டு மக்களிடையே இராமராஜ்யம் என்னும் சிறப்புப் பெயரில் நல்லாட்சியாக விரிவாகப் பரவியிருந்தது. இராமபிரானுடைய அந்தச் சிறப்புமிக்க