பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தோற்றுவாய் 10 கதையை ஒரு புகழ்மிக்க இதிகாசமாக இராமாயணம் என்னும் பெயரில் பல மகான்களும் மகா ஞானிகளும் பாடியிருக்கிறார்கள். நாட்டுப்புறக் கதைகளாக, நாடகங்களாக, கூத்துக்களாக மக்களிடையில் பலராலும் பாடப்பட்டும் பரவியிருக்கிறது. கம்பன் தனது நூலின் வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது, “தேவபாடையில் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினால் உரையின் படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ!” (இதில் மூவர் என்பது வால்மீகி, வசிட்டர், வியாசர் ஆகிய மூவராகும். இதில் வியாசரை நீக்கி போதாயனரைச் சேர்த்து மூவர் என்று கூறுவோரும் உளர்), வடமொழியில் இராமயணக்கதையைப் பெருங்காவியமாகப் பாடியதில் வான்மீகி, வசிட்டர், வியாசர், போதாயனர் ஆகிய மாமுனிவர்கள் முக்கியமானவர்கள். இவை தவிர ஜைனராமாயணமும் மிகவும் பிரபலமானதாகும். இவைகளில் நாரதர் கூற அதைக் கேட்டு வட மொழியில் (சமஸ்கிருத மொழியில்) வால்மீகி முனிவர் பாடியுள்ள இராமாயணப் பெருங்காவியம் சிறப்பு மிக்கதாகும். மக்களிடையில் மிகவும் பிரபலமாகப் பரவியுள்ளதாகும். கம்பீரமான சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டதாகும். கம்பராமாயணத்தின் தோற்றத்தைப் பற்றி தனிப்பாடல் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது. "நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக்கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்