பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும்-அடக்னிவாசன் 11 சீர் அணிசோழ நாட்டுத் திருவழுந்துாரில் வாழ்வோன் கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிசெய்தானே”. வால்மீகி இராமாயணம், பாரத மக்களின் உள்ளங்களில், பயபக்தியோடு பண்டைய பாரதப் பெருமையோடு நன்கு பதிந்து நிலை பெற்றிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தின் மூலத்திலிருந்துதான், இந்திய மொழிகள் அனைத்திலும், இராமயண காவியம் எழுதப்பட்டு வெளி வந்திருக்கிறது. அந்த வகையில் இராமாயண மகா காவியம் பாரத நாடு முழுவதிலும் நமது நாட்டு மக்களின் பொதுக் காவியமாக, பொது இதிகாசமாக நிலை பெற்றிருக்கிறது. தமிழில் வெளிவந்துள்ள இராம காதைகளில், கம்ப நாடர் எழுதியுள்ள இராமாவதாரம் என்னும் மகா காவியம், கம்பராமாயணம் என்னும் பெயரில் சிறப்புப் பெற்று நிலை பெற்றிருக்கிறது. கம்ப ராமாயணம் தமிழில் ஒரு பேரிலக்கியமாக, மிகவும் பிரபலமான பெருங்காவியமாகச் சிறப்புப் பெற்றிருக்கிறது. இந்திய மொழிகளில் உள்ள இராமாயண காவியங்களில் வால்மீகி இராமாயணத்திற்கு அடுத்தப்படியாக, சகல அம்சங்களிலும் சிறப்பு மிக்கதாகக் கம்பராமாயணம் கருதப்படுகிறது. கம்ப ராமாயணம் தமிழ் மொழியை உயர்த்தியிருக்கிறது. தமிழ் மொழியை செழுமைப்படுத்தியிருக்கிறது. வளப்படுத்தியிருக்கிறது. தமிழ் மொழியைப் பெருமைப் படுத்தியிருக்கிறது. தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தி உலக மொழிகளில் ஒன்றாக உயர்வதற்கு உதவியிருக்கிறது. உலக இலக்கியங்களில் முதல் வரிசையில் கம்ப ராமாயணம் நிற்கிறது. கம்பனை அவனுக்குப் பின் வந்த அனைத்துப் புலவர்களும் தமிழறிஞர்களும் தமிழ் படித்த அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள்.