பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Фелpроли 12 கம்பனைப் பற்றிப் பெருமைப் பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் கம்பனை ஒரு மாபெரும் கவிஞனாக, ஈடுஇணையற்ற மகா கவிஞனாக, பெரும் புலவனாக கவிச்சக் கவர்த்தியாகப் பாராட்டுகிறார்கள். கம்பராமாயணத்தைத் தமிழ் மொழியில் உள்ள பேரிலக்கியமாக, பெருங்காவியமாகப் போற்றி வருகிறார்கள். கம்பன் தமிழ் மக்களும் இந்திய மக்களும் பெருமைப் படக் கூடிய மகா கவிஞன். கம்ப ராமாயணம் தமிழ் கூறும் நல்லுலகமும் இந்திய மக்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய மகாகாவியமாகும். ஆயினும் தமிழ் நாட்டில் சிலர் தங்களுக்கிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அன்னிய சக்திகளின் ஆதரவையும் பின் பலமாகவும் பின்புலமாகவும் வைத்து இனவாதம் பேசி, கம்பனையும், கம்ப ராமாயணப் பெருங்காவியத்தையும் இழிவு படுத்தவும், கொச்சைப்படுத்தவும், அந்த மாபெரும் காவியத்தையும் அதன் பாத்திரப் படைப்புகளையும் அவதூறு செய்யவும் முற்பட்டார்கள். கம்ப ராமாயணப் பாடல்களை கவிதைகளை கல்வி நிலையங்களின் பாடத் திட்டங்களில் கூடக் குறைத்து ஒரம் கட்டுவதற்கும் முயற்சித்தார்கள். இராமனை ஆரியன் என்றும், இராவணனைத் தமிழன் என்றும் பேசி, இராமாயணம் தமிழனுக்கு எதிரான கதையென்றும் பேசி, அத்தகைய தவறான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தமிழ் மக்களிடையில் பரப்பினார்கள். நல்ல வேளையாகத் தமிழ் மக்களில் மிகப் பெரும்பாலோர் அத்தகைய தவறான, உண்மைக்கும் அறிவுக்கும் புறம்பான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான, தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் விரோதமான அத்தகைய கருத்துக்களைத் தமிழகம் நிராகரித்து வருகிறது. அத்தகைய இனவாதத் தீய நச்சுக் கருத்துக்களின் மாசுக்காற்று தமிழகத்தில் வேகமாக வீசிய போது, தமிழ் மக்கள் செய்த புண்ணிய பலன், தமிழகத்தின் தவப்புதல்வர் மூதறிஞர்