பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

адмітнтторнй штеялтипарий – егу. «Foofkилғай! 15 இவ்வாறு தமிழகத்தில் அறிஞர்கள் அறிவில் சிறந்த பெரியோர்கள், தெய்வம் கண்ட கவிகள், சங்கீத வித்வான்கள், நாட்டிய கலைஞர்கள், சிற்பிகள், நூல்வல்லோர், தொழில்வல்லோர், தர்மிஷ்டர்கள் தலை சிறந்த தேச பக்தர்கள், தெய்வ பக்தி நிரம்பியவர்கள், அச்சமில்லாத தீரர்கள் பிறந்து தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் தமிழ் பற்றையும் ஆரோக்கியமான கலை இலக்கிய மரபுகளையும் வளர்த்திருக்கிறார்கள், வளர்த்தும் வருகிறார்கள். மறுபக்கம் எதிர்மறைக் கருத்துக்களும், நாட்டு மண்ணில் விஷக் கிருமிகளும் பரவியிருக்கிறது. தமிழகத்து இலக்கிய நீர் நிலைகளைக் கழிவு படுத்தியிருக்கிறது. ஆகாயத்தையும் கலைக் காற்றையும் மாசுப்படுத்தியிருக்கிறது. பெரும் அளவில் அத்தகைய ாதிர்மறைக் கருத்துக்களைத் தமிழகம் நிராகரித்து வந்த போதிலும் இன்றும் அதன் பிசிர்கள் தமிழ்ச் சிந்தனையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அதன் கழிம்புகள் போகவில்லை. அவைகளின் குப்பை கூழங்கள் அவ்வப்போது குவிந்துவிடுகின்றன. அண்மையில் தமிழகத்தின் முதுமையான ஒரு இனவாதத் தலைவர் ஒருவர் தான் விரும்பாத தன்னை முழுமையாக ஆதரிக்காத தனது கருத்துக்களுக்கு மாறுபட்ட, தன்னைத் தனித் தலைவன் எனத் துதிபாடாத தனது படத்தையும் அறிக்கைகளையும் முதல் பக்கத்தில் முத்திரையிட்டுப் போடாத தான் விரும்பாதவர்களைக் கண்டிக்காத தனக்குப் பின்னால் மட்டுமே அணிவகுத்து வராத தன்னையும் தனது குடும்பத்தை மட்டுமே ஆதரிக்காத சில தமிழ்ப் பத்திரிகைகளை விபீஷணப் பத்திரிகைகள் என்று குறிப்பிட்டுக் கூறிப் பேசியிருக்கிறார். இங்கு விபீஷணனுடைய பெயரை அவர் குறிப்பிட்டிருப்பது அவருடைய இனவாதக் கண்ணோட்டத்தில் தான் என்பது தெளிவு, அவருடைய கருத்துப்படி. இராவணன் தமிழன், அவன் தம்பி விபீஷணன் தன் அண்ணனைக் கை விட்டுவிட்டு ஆரிய இராமனுடன் போய்ச் சேர்ந்து