பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Gзтффюлш 16 கொண்டான். அந்த விபீஷணன் ஒரு இனத்துரோகி. அது போல இந்த இனவாதத் தலைவனும் ஒரு தமிழன் இந்த தாழ்விலாத் தமிழனை ஆதரிப்பதை விட்டுவிட்டு சில தமிழ்ப் பத்திரிகைகள் அவருக்கு மாறான கருத்துக்களை வெளியிடுகின்றன. எனவே அந்த தமிழ்ப் பத்திரிகைகளெல்லாம் விபீஷணப் பத்திரிகைகள் என்பது அந்த தமிழ்த் தலைவரின் பேச்சு. அவருடைய பேச்சில் உள்ள இதர விவரங்கள் விஷயங்கள் இருக்கட்டும். அதிலுள்ள நியாய அநியாயங்கள் ஒருபுறம் இருக்கட்டும், விபீஷணனுடைய பெயரை இந்த நேரத்தில் இழுத்திருப்பது அவர் அணிந்துள்ள சித்தாந்தத் கண்ணாடி மூலம் கிடைக்கும் கரும் பார்வையாகும். அதுதான் கம்பனுக்கும் கம்பராமாயணப் பெருங் காவியத்திற்கும் எதிரான குறுகிய இனவாதத் குறும்பார்வையாகும். ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த மூத்தவரின் கருத்துக்கள், தமிழுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் இன மரபுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தமிழ் பாரம்பரியத்திற்கும் எதிரான விரோதமான எதிர்மறைக் கருத்துக்களாகும். தமிழுக்கு ஏற்பட்டுள்ள இந்த கருப்புக் களங்கத்தைப் போக்க வேண்டியதும் அதன் மிச்ச சொச்சங்களைத் துடைத்தெரிய வேண்டியதும் மிகவும் அவசியமாகும். கம்பனுடைய மகா காவியத்தின் படி விபீஷணன் என்பது யார்? விபீஷணன் என்னும் பெயரைக் கூடக் கம்பன் தனது காவியத்தில் வீடணன் என்று தமிழ்ப்படுத்தியே குறிப்பிடுகிறார். வீடணன் உத்தமன், அறவழியில் நிற்பவன், தர்மவான், சத்தியன், நீதியான், ஐம்புலன்களை அடக்கி நேர்வழியில் செல்பவன், அறிவில் மிக்கவன், பக்திமான், வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் முதலியோர் அனைவரும் விரும்பும்படி பிறந்துள்ள புண்ணியன், குற்றமில்லாத குணத்தினன், பகைமை நீங்கிய மனத்தினன், தனித்து