பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும் - அ. சீனிவாசன் 17 வாழும் தருமம் அன்னான், தகவிறு சிந்தையன், தரும நீதியன், கவிஞரின் அறிவு மிக்கவன். அனுமன் சீதையைத் தேடி இலங்கை நகரில் செல்லும் போது ஒவ்வொரு மாளிகையாகச் சென்று பார்க்கிறார். அதில் வீடணன் மாளிகைக்குச் சென்று அவன் துங்கிக் கொண்டிருந்த காட்சியைப் பற்றி, “ஏந்தல் இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்திக் காந்தன் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் வேந்தர், வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்பப் o போந்த புண்ணியன் கண் அகல் கோயிலுள் புகுந்தான் என்றும் “பளிக்கு வேதிகைப் பவழத்தின் கூடத்துப் பசுந்தேன் துளிக்கும் கற்பகப் பந்தரில் கரு நிறந்தோர் பால் வெளித்து வைகுதல் அரிது என அவர் உருமேவி ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனை உற்றான்” என்றும் கம்பர் கூறுகிறார். இன்னும் வீடணனைப் பற்றிக் கும்பகருணன் இராமனிடம் கூறும் போது நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லாமல் சாதியால் வந்த சிறுநெறி அறியான் என் தம்பி என்று கூறுகிறான். போர்க்களத்தில் உயிர் போகும் தறுவாயில் கும்பகருணன் தன் தம்பி வீடணனைப் பற்றி இராமனிடம் கூறுகிறான். "நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறியல்லால் சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி