பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்றுவாய் 18 ஆதியாய்! உனை அடைந்தான், அரசர் உருக் கொண்டு அமைந்த வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்” என்றும், மேலும் இராவணன் வீடணனைக் கண்டுவிட்டால் அவனைத் தம்பி என்று பார்க்காமல் கொன்று விடுவான் எனவே அவனை எப்படியும் காப்பாற்றுவாய். 'தம்பி யென நினைந்து இரங்கித் தவிரான் அத்தகவு இல்லான் நம்பி இவன் தனைக் காணின் கொல்லும் இறை நல் கானால் உம்பியைத்தான், உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் எம்பி பிரியான் ஆக அருளுதி! யான் வேண்டினேன்” என்று இராமபிரானிடம் கும்பகருணன் வரம் வேண்டுகிறான். பனிமலர்த்தவிசின் மேலோன் (நான்முகன்) பார்ப்பன குலத்திற் கெல்லாம் தனி முதல் தலைவன் ஆனாய் என்று இந்திரசித்தன் தனது சிற்றப்பனைக் குறித்துக் கூறுகிறான். அதாவது வீடணன் பிரம்ம குலத்தின் வழியில் வந்த பார்ப்பன குலத்தில் தோன்றியவன் என்பதை இங்கு குறிப்பிடுகிறான். "பனி மலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக் கெல்லாம் தனி முதல் தலைவன் ஆனாய், உன்னை வந்து அமரர் தாழ்வார்