பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Смитеттерий uлэлтивдий — «9/. சீனிவாசன் 19 மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் இனி உனக்கு என்னோ மானம்? எங்களோடு அடங்கிற்று அன்றே” என்பது கம்பன் பாடல் (குறிப்பு இங்கு இந்திர சித்தன் இராவணனுடைய குலத்தை பார்ப்பன குலம் எனக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது) அதாவது இந்திரசித்தன் நிகும்பலை யாகம் செய்தபோது அந்த யாகத்தை அழிப்பதற்கு இலக்குவனும் வீடணனும் சில வானர வீரர்களும் சென்றனர். அங்கு இந்திர சித்தனுக்கும் இலக்குவனுக்கும் இடையில் கடும் போர் நிகழ்ந்தது. அதில் இந்திரசித்தன் தொடுத்த கணைகளை யெல்லாம் இலக்குவன் தடுத்தான். எனவே தனது தோல்விகளுக்கெல்லாம் வீடணன்தான் காரணம் என்று இந்திரசித்தன் கருதினான். வீடணனை இகழ்ந்து பேசுகிறான். அப்போது இந்திரசித்தன் வீடணனிடம் மனிதரைப் புகழ்ந்து அவர்களைத் தொழுது அவர்கள் பின் செல்கிறாய். நீர் இருக்கும் வரையில்தான் மீன் இருக்கும். அதைப் போல இராவணன் இருக்கும் வரையில்தான் அரக்கர் குலம் இருக்கும். நீ பார்ப்பன குலத்துக் கெல்லாம் தலைவனாகப் பிறந்தாய் மனிதருக்கு அடிமையாகி இராவணனுடைய செல்வத்தை ஆளப் போகிறாயா? உனக்கு மானம் இல்லையா? எதிரிகளின் அம்பினால் இராவணன் வீழ்ந்து விட்டால் நீ அவன் மீது விழுந்து அழுவாயா அல்லது எதிரிகளோடு சேர்ந்து கொண்டு அந்த இராமனை வாழ்த்தித் தொழுது ஆர்ப்பாட்டம் செய்வாயா? என் அம்புகளுக்கு இரையாகி போர்க்களத்தில் வீழ்ந்து பின்னர் மருந்தினால் உயிர் பெற்று வந்துள்ள மனிதர் இலங்கை வேந்தனைக் கொல்வார்களா? அதன் பின்னர் நீ இலங்கையை ஆளப் போகிறாயா? என்றெல்லாம் இகழ்ந்து பேசிப் பழி வந்தாலும் பரவாயில்லை. உன்னை வானுலகிற்கு அனுப்புகிறேன்