பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்றுவாய் 24 இரவு 7 மணியளவில் அருப்புக் கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ரீ ஜெயவிலாஸ் கப்பராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் "கல்யாண ராமனும் பரசுராமனும் என்னும் தலைப்பில் இந்நூலாசிரியர், மகாராஜபுரம் பாரதி சீனிவாசன் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். அந்த சொற்பொழிவின் சுருக்கமாக இந்தச் சிறிய நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலாசிரியரின் குறிப்புகளுடன், தோற்றுவாய் உரையுடன் இந்த நூல் வெளியிடப்படுகிறது. இன்று தமிழகத்திலும் தமிழ் கூறும் நல்லுலகத்திலும் கம்பனுடைய மகா காவியம் பல இடங்களிலும் சிறப்பாக பேசப்படுகிறது. தொடர்ச்சியாக பல இடங்களிலும் கம்பன் காவியம் தொடர்பான பல நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இடையில் ஏற்பட்ட சில இடையூறுகளையும் கடந்து இன்று கம்பனைப் பற்றிய பல ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன. பல சொற்பொழிவுகள், பாராயணங்கள் பட்டி மன்றங்கள், கவியரங்குகள் முதலியன நடந்து வருகின்றன. மக்கள் மனதில் கம்பன் காவியத்தின் கருத்துக்கள் பதிந்து தொடர்ந்து பரவி வருகின்றன. அதில் ஒரு இம்மித்துளியாக இந்த நூலும் வெளியாகிறது. கம்பன் வாழ்க, கம்பன் புகழ்பாடும் நல்லோர் அனைவரும் ரீ ராமபிரானின் அருள் பெற்று பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க.