பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மாமுனிவர்களின் சந்திப்புகள் இராமாயண மகாகாவியத்தில் வசிட்டன், விஸ்வாமித்திரன், பரசுராமன், அகத்தியன், ஆகிய மகாமுனிவர்கள் வருகிறார்கள். அவர்கள் பாரதத்தின் சிறந்த ஞானிகள். மகா வீரர்கள். வேதங்களும் உபவேதங்களும் தனுர் வேதமும் முழுமையாகக் கற்றவர்கள். கடுமையான தவங்கள் செய்து பலம் பெற்றவர்கள். அரசியல் ஞானம் மிக்கவர்கள். ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள். அரச குமாரர்களுக்கு கல்வி மற்றும் இதர கலை ஞானங்களையும் கற்றுக் கொடுப்பவர்கள். இராஜகுருக்கள், பேராசிரியர்கள், மந்திரம், தந்திரங்களையும் அவைகளை செயல்படுத்தும் வழிமுறைகளையும் கற்றவர்கள். கற்பிப்பவர்கள் மகாமுனிவர்களில் சிறந்தவர்கள். வசிட்டர் அந்தண முனிவர்களின் தலைவர், வசிட்டர் வாக்கு வேதவாக்காகக் கருதப்படும் அளவிற்கு மிகவும் உயர்வானவர். ரகுவம்சத்தின் ராஜகுரு சிறந்த கல்விமான், சதுர் வேதங்களையும் . உபவேதங்களையும், தனுர் வேதத்தையும் உபநிடங்களையும் புராணங்களையும் நீதி சாஸ்திரங்களையும் அர்த்த சாஸ்திரங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் நன்கு கற்றவர், கற்பிப்பவர். விஸ்வாமித்திர மாமுனிவருக்கே பிரம்மரிஷி பட்டம் கொடுத்தவர் வசிட்ட முனிவர். விஸ்வாமித்திர மாமுனிவர், அரசனாக இருந்து, அரச பதவியைத் துறந்து, ராஜ்ய பாரத்தைத் தனது மக்களிடம் ஒப்படைத்து விட்டுக் கடும் தவம் மேற்கொண்டு, பிரம்மரிஷி பட்டத்தையும் பதவியையும் அடைய விரும்பினார். கூடித்திரிய குலத்தில் பிறந்து அரச பதவி வகித்து வந்தால் பிரம்மரிஷி பட்டத்தைப் பெற முடியாது என்றும் வசிட்டரும் இதர ரிஷிகளும் மறுத்து விட்டார்கள். நான் பிரம்மரிஷி பட்டத்தை அடைந்தே தீருவேன் என்று விஸ்வாமித்திரர் மேலும் கடுமையான தவம் புரிந்து வசிட்டருடனும் கடும்போர் நடத்தி அதில் வெற்றி பெற முடியாமல் மேலும் கடுமையான தவம் புரிந்து தனது உடம்பை மரக்கட்டை போல் ஆக்கிக் கொண்டு விட்டார்.