பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*фштыктутларні шлативона — «ан айопытаніі 37 வில் முரிந்து விட்டது, இராமன் அப்போட்டியில் வெற்றி பெற்று சீதையைக் கைப் பிடித்தான். இராமன் சீதை திருமணம் நடந்து முடிந்தது. இராமனுடன் அவனுடைய சகோதரர்களுக்கும் மிதிலையில் திருமணங்கள் நடந்து முடிந்தன. பின்னர் சில நாள் புதுமணத் தம்பதிகளும், தசரதச் சக்கரவர்த்தியும் பரிவாங்களும் மிதிலையில் தங்கி விட்டு, அயோத்தி திரும்பினர். வழியில் அவர்களை இடை மறித்து பரசுராமன் தடுத்தார். கல்யாணராமன் - பரசுராமன் சந்திப்பு நிகழ்ந்தது. அது பற்றி விவரமாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். இந்த சந்திப்பில் பரசுராமனுடைய கையில் இருந்த விஷ்ணு தனுசும், அவருடைய தவ பலம் முழுவதும் இராமனுக்கு சேர்ந்தது. கடைசியாக ஆரண்ய காண்டத்தில் ரீராமன் - அகத்திய முனிவர் சந்திப்பு நிகழ்கிறது. அகத்திய மாமுனி மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களையும் தந்திரங்களையும் இராமனுக்கு கற்றுக் கொடுத்தும் ஆயுதங்களையும் வில் அம்புகளையும் அம்புக் கூடுகளையும், கேடயங்களையும், கவசங்களையும் கொடுத்தும் ஆசீர்வதிக்கிறார். இவ்வாறாக மாமுனிவர்களான வசிட்டர், விசுவாமித்திரர், பரசுராமர், அகத்தியர் ஆகியோர் மூலம் கல்விப் பயிற்சியும், சக்தி ஆயுதங்களும், ஆயுதப் பயிற்சியும், மந்திர தந்திர பயிற்சிகளும், தாக்குதல் கருவிகளும், தற்காப்புக் கருவிகளும் பெற்று, வேறுள குழுக்களையெல்லாம் வெல்வதற்கான சக்தியையும் அரக்கர்களை வென்றொழிப்பதற்கான ஆற்றலையும் பெற்று முழுமனிதனாக முதிர்ச்சி பெறுகிறார் ரீராமபிரான். மானுடப்பிறவி எடுத்து, அரச குடும்பத்தில் பிறந்து அனைத்து பயிற்சிகளையும் பெற்று வனவாசமும் மேற்கொண்டு சகல இன்ப துன்பங்களையும் அனுபவித்து, அரக்கர்களை வென்று அறத்தை