பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பரசுராமாவதாரம் 40 ஒரு சமயம் கார்த்தவீரியார்ச்சுனன் பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றிருந்தான். நீண்ட நேரம் வேட்டையாடினான். அதனால் களைப்படைந்தான். பசி, தாகம் அவனையும் அவனுடைய படை வீரர்களையும் கடுமையாக வாட்டியது. அப்போது அருகில் ஒரு ஆசிரமம் தென் பட்டது. அது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமமாக இருந்தது. கார்த்தவீரியார்ச்சுனன் அந்த ஆசிரமத்திற்குச் சென்று அங்கு தனது படை பரிவாரங்களுடன் தங்கின்ான். அந்த நேரத்தில் ஆசிரமத்தில் ஜமதக்கினி முனிவர் மட்டுமே இருந்தார். அவருடைய புதல்வர்கள் வெளியில் சென்றிருந்தனர். அரசனும் அவருடைய படை பரிவாங்களும் பசி தாகத்துடன் இருப்பதைக் கண்ட முனிவர் தனது காமதேனு பசுவின் மகிமையால் அரசனுக்கும் அவனுடைய படை பரிவாரங்களுக்கும் நல்ல ருசியான அறுசுவை உணவும் நீரும் பாலும் பரிமாறினார். அவர்களுக்கு வேண்டிய எல்லா செளகர்யங்களையும் செய்து கொடுத்தார். சற்று நேரம் அங்கு தங்கி ஒய்வு எடுத்து விட்டு முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டு கார்த்தவீரியார்ச்சுனன் தனது படை பரிவாரங்களுடன் தனது நாடு திரும்பினான். நாடு திரும்பிய மன்னன் தனது அரண்மனைக்குச் சென்று அமர்ந்த பின்னரும் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிய நினைவாகவே இருந்தான். அந்த அதிசயத்தைப் பற்றி எண்ணி ஆச்சரியப்பட்டான். * காட்டில் ஒரு ஆசிரமத்தில் வாழும் ஒரு முனிவருக்கு இவ்வளவு சக்தியா என்று சிந்திக்கத் தொடங்கினான். காமதேனுவை எண்ணி ஆச்சரியப்பட்டான். அந்தக் காமதேனு தன்னிடமிருந்தால் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதினான். தன்னை விடப் பராக்கிரமத்தில் சிறந்தவர் எவரும் இல்லை என்னும் இறுமாப்பில் கார்த்தவீரியார்ச்சுனன் தனது படைகளை அனுப்பி காமதேனுவை கவர்ந்து வரச் செய்தான். தன்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று மன்னன் ஆணவம் கொண்டிருந்தான். அக்காலத்திய மன்னர்கள் பலரிடமும் தாங்கள்