பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பகராமனும்-அ-சீனிவாசன். 41 கூடித்திரிய அரசர்கள் படை பலமும் பராக்கிரமும் கொண்டவர்கள், தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்னும் ஆணவம் மிகுந்திருந்தது. வெளியில் சென்றிருந்த ஜமதக்கினியின் புதல்வர்கள் ஆசிரமம் திரும்பிய போது நடந்ததை அறிந்து அரசன் மீது மிகுந்த கோபம் கொண்டனர். ஜமதக்கினி முனிவரின் புதல்வர்களில் இளையவர் பரசுராமர். அவர் கடுங் கோபம் கொண்டார். தன்னுடைய சிறப்பு ஆயுதமான கோடரி மற்றும் வில் அம்பு பாணம் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நாட்டை நோக்கி ஓடினார். கார்த்தவீரியார்ச்சுனன் தனது பெரும் படையைச் திரட்டி ஆயுதபாணியாக வந்த பரசுராமனை எதிர்த்தான். இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. பரசுராமர் மிகவும் உக்கிரமான போர் நடத்தி மன்னனின் படைகளையெல்லாம் கொன்று குவித்தார். கார்த்தவீரியார்ச் -சுனனுடைய ஆயிரம் கைகளையும் அவனுடைய தலையையும் வெட்டி வீழ்த்தினான். அரசனுடைய புதல்வர்களும் எஞ்சிய படை வீரர்களும் பயந்து நடுங்கி பரசுராமரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் காமதேனுவை அவரிடம் ஒப்படைத்தனர். பரசுராமரும் காமதேனுவை அழைத்துக் கொண்டு அரசனுடைய புதல்வர்களையும் படை வீரர்களையும் மன்னித்து அனுப்பி விட்டார். பரசுராமர் காமதேனுவை அழைத்துக் கொண்டு வந்து தந்தையிடம் ஒப்படைத்தார். போர் நடந்த விவரங்களைத் தந்தையிடம் எடுத்துக் கூறினார். கடும் போர் நடந்தது குறித்தும் அதில் கார்த்தவீரியார்ச்சுனன் கொல்லப்பட்டது குறித்தும் கேள்விப்பட்டு ஜமதக்கினி முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். பரசுராமரிடம் கூறினார். மகனே நீ கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றது மி கவும் பாவமான காரியம். பிராமண குலத்தில் பிறந்த நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஆவேசம் கொண்டு விட்டாய். பிராமண குலத்திற்குப் பெருமை தருவது பொறுமையே யாகும். நீ அதை